கொரோனா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், இன்று நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சூரிய கிரகணம் பற்றி ஏற்கெனவே சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகள் கதைகளை வைத்து சூரிய கிரகணம் குறித்து நெட்டிசன்கள் பலரும் ரியாக்ஷன்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக வானியல் நிகழ்வுகளை மக்கள் நீண்ட காலமாக அறிந்தே வந்துள்ளனர். கிரகணம் பற்றி எல்லா பழமையான சமூகத்துக்குள்ளும் பல்வேறு நம்பிக்கைகளும் கதைகளும் இருந்து வருகின்றன. அந்த வகையில், சூரியனை பாம்பு விழுங்குவது என்று பல கதைகள் உள்ளன. ஆனால், அறிவியல்படி வானில் சூரியன், பூமி, சந்திரன் 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறபோது, சூரியனின் ஒளியை பூமியின் மீது விழாமல் சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மக்கள் இதுவரை எத்தனையோ சூரிய கிரகணங்களைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் உலக நாடுகள் முடங்கியுள்ள சூழலில் இந்த சூரிய கிரகணம் மிகவும் கவனத்தையும் பல மூட நம்பிக்கை கதைகள் உலவுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.
சிலர் சூரிய கிரகணத்துக்குப் பிறகு கொரோனா வைரஸ் குறையத் தொடங்கிவிடும் என்றும் சிலர் இந்த சூரிய கிரகணத்துக்குப் பிறகு கொரோனா வைரஸ் வீரியம் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
கிரகணத்தின்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் உலக்கையை நிற்கவைத்தால் நிற்கும் என்பது மக்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இன்று சூரிய கிரகணம் தொடங்கியதை தெரிந்து கொள்ள நம் முன்னோர்கள் காட்டிய வழியில் சிறிய பரிசோதனை மேற்கொண்ட போது நமது முன்னோர்கள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது pic.twitter.com/lGWZxYFWGx
— Arumugam Krishnasamy (@Arumuga61497143) June 21, 2020
இது குறித்து ஒருவர் டுவிட்டரில், “இன்று சூரிய கிரகணம் தொடங்கியதை தெரிந்து கொள்ள நம் முன்னோர்கள் காட்டிய வழியில் சிறிய பரிசோதனை மேற்கொண்ட போது நமது முன்னோர்கள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அறிவியல் - அறிந்து கொள்வோம் ????
நாளை தமிழகத்தில் பகுதி ☀️ சூரிய கிரகணம் நிகழ உள்ளது - உலக்கை கிரகணத்தின் போது மட்டுமே நேராக
நிற்கும் என்பது முற்றிலும்
பொய் - இன்றே அதனை சோதித்த விஞ்ஞானிகள் ???? pic.twitter.com/iZVufd4DhV
— Neppolian (@i_neppo) June 20, 2020
மற்றொருவர் அப்படியெல்லாம் இல்லை. கிரகணத்துக்கு முன்தின நாளே சனிக்கிழமை உலக்கை நிற்க வைத்தால் நிற்கிறது பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோவை டுவிட் செய்துள்ளார்.
நாளைக்கு சூரிய கிரகணம் என்பதை நேரடியாக சொல்லலாம் அல்லவா
அதை விட்டுவிட்டு
உலகம் அழியப்போகிறது என்று புருடா விடுவது போங்கடா ????????????????
— Thangai Of ❣️ SK ❣️ HAPPYBADYMADHURAI (@sathyakowsi_SK) June 20, 2020
ஒரு டுவிட்டர் பயணர், “நாளைக்கு சூரிய கிரகணம் என்பதை நேரடியாக சொல்லலாம் அல்லவா அதை விட்டுவிட்டு உலகம் அழியப்போகிறது என்று புருடா விடுவது போங்கடா” என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.
சூரிய கிரகணம் ஒரு இயற்கை நிகழ்வு!
அதற்கெதற்க்கு ஷாந்தி பரிகாரம் பன்னனும்!?
மக்களை முன்னேற விடுங்கடா!. https://t.co/jrUttZehjG
— Jᴏʜɴʏ Bʀᴀᴠᴏ (@DravidanJeeva) June 20, 2020
அதே போல மற்றொரு டுவிட்டர் பயணர், “சூரிய கிரகணம் ஒரு இயற்கை நிகழ்வு! அதற்கெதற்க்கு ஷாந்தி பரிகாரம் பன்னனும்!? மக்களை முன்னேற விடுங்கடா” என்று கூறியுள்ளார்.
மக்களே வெறும் கண்ணால இன்னைக்கு சூரியனை பாத்தா பார்வை போக சான்ஸ் இருக்காம் , so be careful ????#சூரியகிரகணம் pic.twitter.com/08hSQlybrR
— Thug1 (@thug1one) June 21, 2020
இன்னொரு டுவிட்டர் பயணர், “மக்களே வெறும் கண்ணால இன்னைக்கு சூரியனை பாத்தா பார்வை போக சான்ஸ் இருக்காம். அதனால், எச்சரிக்கையாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
• இன்று #சூரியகிரகணம் எனக்கு கிரகணம் பிடிக்கக்கூடாது என்று எனது காதில் எங்கம்மா தர்ப்பைப்புல் வைத்துவிட்டார்கள் ???????????????????????????????? pic.twitter.com/PRUJ7tjLcN
— Alex ANGURAJ (@AlexAngurajoffl) June 21, 2020
ஒரு டுவிட்டர் பயணர், “இன்று சூரியகிரகணம் எனக்கு கிரகணம் பிடிக்கக்கூடாது என்று எனது காதில் எங்கம்மா தர்ப்பைப்புல் வைத்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு நெட்டிசன்கள் பலரும் சூரிய கிரகணம் பற்றி பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் ஊரில் சூரிய கிரகணம் தொடங்கிவிட்டது என்று லைவ் அப்டேட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.