By: WebDesk
Updated: December 14, 2018, 03:20:48 PM
Sonakshi Sinha
Sonakshi Sinha Gets Rusted Iron Piece Instead of Headphones : ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அதன் நம்பகத்தன்மையை சோதிக்கும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களான அமேசான், ஃப்லிப்கார்ட் போன்றவரை நமக்கு ஒரு வகையான சோம்பேரித்தனத்தை ஊட்டியிருக்கிறது. உட்கார்ந்த இடத்திலிருந்தே தேவைப்படும் பொருட்களை எல்லாம் நினைத்தப்போது வாங்க முடிகிறது.
ஒரு புறம் இது பெரும் வசதியாக இருந்தாலும் மறுபுறம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஒரிஜினலா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறது பல சம்பவங்கள். அதுவும் சமீகக் காலத்தில், ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு இணையான போலி பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.
Sonakshi Sinha Gets Rusted Iron Piece Instead of Headphones : சோனாக்ஷி சின்ஹா -வை ஏமாற்றிய அமேசான்
இது குறித்து அமேசான், ஃப்லிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் மீது குற்றமில்லை என்பது போல விளக்கம் அளித்து வந்தாலும், இட்னஹ் மோசடிகள் ஓய்ந்த பாடில்லை. தமிழ் சினிமா நடிகர் நகுல் கூட சமீபத்தில் ஃபிலிப்கார்ட் நிறுவனத்தில் ஐபோன் வாங்கி போலி போன் பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு பணம் வாபஸ் அளிக்கப்பட்டது.
தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருக்கும் இதே நிலை ஏர்பட்டுள்ளது. லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் அமேசானில், போஸ் ஹெட்செட் ஒன்றை ஆர்டர் செய்தார். ஆனால் இவருக்கு அதனை அளிக்கும் போது போஸ் அட்டைப் பெட்டியில், ஒரு துருப் பிடித்த பழைய ஆணையை வைத்து டெலிவரி செய்துள்ளனர்.
Hey @amazonIN! Look what i got instead of the @bose headphones i ordered! Properly packed and unopened box, looked legit… but only on the outside. Oh and your customer service doesnt even want to help, thats what makes it even worse. pic.twitter.com/sA1TwRNwGl
இதனால் கோவமைடைந்த சோனாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஹே அமேசான். போஸ் ஹெட்செட் ஆர்டர் செய்ததற்கு எனக்கு என்ன கிடைத்துள்ளது பாருங்கள். நிஜமான பார்சல் போலவே பேக் செய்து வந்துள்ளது. ஆனால் வெளியே தான். அதோடு உங்கள் கஸ்டமர் சர்வீஸ் உதவி கூட செய்ய மாட்டேங்கிறாங்க. அது தான் இன்னும் மோசமாக இருக்கு.”