நடிகை சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலனும், தொழிலதிபருமான ஆனந்த் அஹுஜா வை இன்று திருமணம் செய்துக் கொள்கிறார்.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்பு, கபூர் வீட்டில் நடக்கும் முதல் திருமண விழா என்பதால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் சோனம் கபூரின் திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர். நேற்று இரவு நடந்த சங்கீத் விழாவில் சோனம் கபூர் பாரம்பரிய உடையில் தன் வருங்கால கணவருடன் நடனம் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும், மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. துக்க சம்பவம் நடந்த ஸ்ரீதேவி வீட்டில் தற்போது ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி நடைபெறவுவது கபூர் குடும்ப உறுப்பினர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/cricket-3-198x300.png)
மேலும், மெஹந்தி நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட ஸ்ரீதேவி மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் ஆகியோர் தனது அக்காவுடன் செல்ஃபீக்களை எடுத்து மகிழ்ந்தனர். மிகவும் பாரம்பரிய முறையில், சோனம் கபூரின் திருமணம் நடைபெறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/cricket-2-290x300.png)
சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, கல்யாணத்திற்கும் முன்பு, ஆனந்த், சோனம் கபூரிடம் ஒரு கண்டீஷனை போட்டுள்ளாராம். தனிமையில் இருக்கும் போதும், இருவரும் கட்டாயமாக தொலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்பதே அந்த கண்டீஷன்.
,
,