Sonam Kapoor’s fashion advice to Deepika Padukone: பாலிவுட் நடிகை சோனம் கபூர், தற்போது தான் நடித்திருக்கும் “த ஸோயா ஃபேக்டர்” படத்தின் புரொமோஷனில் படு பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் கலந்துக் கொண்ட புரொமோஷன் நிகழ்ச்சியில் ‘ரேபிட் ஃபையர்’ ரவுண்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தீபிகாவின் சமீப கால ஃபேஷன் தேர்வுகளைப் பற்றி விமர்சித்த சோனம், “அவர் உடல் தெரியும்படி உடை அணிய வேண்டும்” என்றார். ”அவருக்கு அற்புதமான உடல்வாகு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே உடலைக் காட்டும்படியான ஆடையை அவர் அணிய வேண்டும் ” எனக் கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார் சோனம்.
இதற்கு முன், ’காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது, “உங்களுக்கென சொந்த ஸ்டைலை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று தீபிகாவுக்கு அறிவுறுத்தியிருந்தார் சோனாம். பிரபல அரட்டை நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் தீபிகாவும், சோனமும் ஒன்றாக தோன்றியிருந்தாலும், பின்னர் அடுத்த சீசனில் அப்பா அனில் கபூருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சோனம் கபூர், காத்ரினா கைஃப், தீபிகா இருவரையும் ஒப்பிட்டு, காத்ரினாவைப் பாராட்டினார்.
”காத்ரீனா அவராக இருக்கிறார். ஒரு விஷயத்துக்குள் தன்னை பொருத்திக் கொள்ள அவர் முயற்சிக்கவில்லை, அவரை நான் நிறைய மதிக்கிறேன். ஜீன்ஸ், டி-ஷர்ட், போனி டெய்ல் என சாதாரணமாக தோன்றினாலும், ஒரு வித ஸ்டைலைக் கொண்டிருக்கிறார்” என காத்ரினா கைஃபை புகழ்ந்து தள்ளினார் சோனம் கபூர்.
தீபிகாவை ‘நல்ல பெண் கெட்டுப் போய் விட்டாள்’ எனக் குறிப்பிட்ட சோனம், தீபிகாவிடம் இருக்கும் ‘அதிக உற்சாகமான பி.ஆர் (பப்ளிக் ரிலேஷன்) டீம்’ தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு முன் சோனம், நடிகை ஐஸ்வர்யா ராயை ஆண்டி என அழைத்தும், அவரது ‘பர்ப்பிள்’ நிற லிப்ஸ்டிக்கை கிண்டல் செய்தும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.