scorecardresearch

சோனம் கபூர் திருமணத்தில் ரன்வீர் சிங் குடிபோதையில் ஆட்டம்!!!

சூப் சாங் பாடிக் கொண்டிருந்தார்.

சோனம் கபூர் திருமணத்தில் ரன்வீர் சிங் குடிபோதையில் ஆட்டம்!!!

மும்பையில் நடைப்பெற்ற சோனம் கபூர் திருமணத்தில் நடிகர் ரன்வீர் சிங் குடித்து விட்டு எடுத்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல ஹீரோயினான சோனம் கபூர் தனது காதலருனான ஆனந்த் அகுஜாவை நேற்று முன் தினம் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாகவும், சீக்கிய முறைப்படியும் நடைப்பெற்றது.

இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். சோனம் கபூரும், ஆனந்த் அகுஜாவும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கபூர் குடும்பத்தில் நடிகை ஸ்ரீதேவி மரனம் அடைந்தார். ஸ்ரீதேவியின் மைத்துனர் மகள் தான் சோனம் கபூர்.

எனவே, சோனம் கபூரின் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல நிகழ்வு என்பதால் பாலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம், பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த பார்ட்டில் நடிகர் ரன்வீர் சிங் நடிகை அலியா பட் உடன் கலந்துக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=b09YGxYoDCE

 

கணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்… கண்டித்த தாய்!!!

அதன் பின்பு, இரவு குடித்து விட்டு டான்ஸ் ஆடியும் மகிழ்ந்துள்ளார். ரன்வீர் குடித்து விட்டு தனது செல்ஃபோனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திருமண வீட்டில் ரன்வீர் சிங் செய்த செயல்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் ரன்வீர் குடித்து தனது முன்னாள்  காதலியான தீபிகா படுகோனின் புகைப்படத்தை பார்த்து சூப் சாங் பாடிக் கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sonamkishaadi ranveer singhs crazy dance