Advertisment

பூட்டிவைத்த 'திருமண' ரகசியம்: ஓபனாக உடைத்த சோனியாஅகர்வால்

நடிகை சோனியா அகர்வால் தாலி கட்டுகிற வீடியோவை வெளியிட்டு 3 நாட்கள் காத்திருங்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், பூட்டி வைத்திருந்த திருமண ரகசித்தை ஓபனாக உடைத்து அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress sonia agarwal, sonia agarwal launched wedding plan company, sonia agarwal, சோனியா அகர்வால், திருமண நிகழ்ச்சி ஏற்பாடு, வெட்டிங் பிளான், டேல் ஆஃப் டு, சோனியா அகர்வால், திருமணம், sonia agarwal marriage event company, sonia agarwal tale of two, latest tamil cinema news, tamil cinema news

நடிகை சோனியா அகர்வால் தாலி கட்டுகிற வீடியோவை வெளியிட்டு 3 நாட்கள் காத்திருங்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், பூட்டி வைத்திருந்த திருமண ரகசித்தை ஓபனாக உடைத்து அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகை சோனியா அகர்வால் என்றதும் இன்றைக்கும் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி திவ்யாவும் அனிதாவும் ரசிகர்களின் கண்முன்னால் வந்து செல்வார்கள்.

தெலுங்கு சினிமா மூலம் சினிமா துறைக்குள் வந்த சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். சோனியா அகர்வால் தமிழ் சினிமாவுக்குள் வந்ததில் இருந்து கிசுகிசுகளும் புற்றிசலாய் பறக்கத் தொடங்கியது. இயக்குனர் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கு காதல் என்று கிசுகிசுக்கள் கிளம்பியது. ஆனால், சோனியா அகர்வாலோ செல்வராகவனோ இதற்கு பதிலளிக்கவில்லை.

சோனியா அகர்வால், காதல் கொண்டேன் படத்துக்கு பிறகு, செல்வராகவன் இயக்கத்தில், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், பெற்றோர்களின் சம்மதத்துடன் 2006-ம் ஆண்டு சோனியா அகர்வாலும் செல்வராகவனும் திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் உருவானது. சோனியா அகர்வாலும் செல்வராகவனும் கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு, சோனியா அகர்வால் கடந்த 10 ஆண்டுகளாக 2வது திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். விவாகரத்துக்குப் பிறகு, சோனியா அகர்வால் சில டிவி சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான விஜய் அருண் நடித்த தடம் படத்தில் சோனியா அகர்வாலின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தது.

publive-image

இந்த நிலையில், சோனியா அகர்வால், கடந்த ஜூலை 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டுகிற திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இன்னும் 3 நாட்கள் காத்திருங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் பலரும் சோனியா அகர்வால் 2வது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று நினைத்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சோனியா அகர்வால் என்ன அறிவிக்கப்போகிறார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, சோனியா அகர்வால் பூட்டி வைத்திருந்த ரகசியத்தை ஓபனாக உடைத்துள்ளார்.

அந்த ரகசியம் என்னவென்றால், சோனியா அகர்வால் சில நண்பர்களுடன் இணைந்து, கல்யாணத்தை திட்டமிட்டு செய்து தரும் ஈவென்ட் கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு உதவியாக கை கோர்த்துள்ளவர்கள் அனைவருமே, பிரபலங்கள் தான். இவருடைய இந்த வெட்டிங் பிளான் தொழில் நல்லபடியாக வளர பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டேல் ஆஃப் டு என்ற சோனியா அகர்வால் திருமணத்தை நடத்தி தரும் நிறுவனம் பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema Sonia Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment