Advertisment

சன் டி.வி புதிய சீரியல்: 2 குழந்தைகளின் தாயாக பிரபல நடிகை

சபாஷ் மீனா என்ற புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி; முக்கிய நடிகர்கள் யார் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabaash Meena

சபாஷ் மீனா என்ற புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி

தமிழக இல்லத்தரசிகளுக்கு சிறந்த சீரியல்களை வழங்கி வரும் சன் டிவி, 'சபாஷ் மீனா' என்ற புதிய சீரியலை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

Advertisment

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் எதிர்நீச்சல், சுந்தரி மற்றும் கயல் போன்ற சீரியல்கள் சன் டிவியின் சீரியல்கள் தான்.

இதையும் படியுங்கள்: ‘பேங்க் காரங்க வந்து வீட்டைப் புடுங்கிட்டா..!’ ராஜலட்சுமி செந்திலுக்கு இப்படி பிரச்னையா?

இந்த நிலையில், காதலை மையமாக வைத்து, 'சபாஷ் மீனா' என்ற சீரியலை வெளியிட சன் டிவி திட்டமிட்டுள்ளது. ஆனந்தராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை இந்து சௌத்ரி இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இலக்கியா சீரியல் புகழ் நடிகர் ஜெய் எஸ்.கே கதாநாயகனாக நடிக்கிறார்.

இதனிடையே, பிரபல நடிகை சோனியா போஸ் விரைவில் இந்த சீரியல் மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். இந்த சீரியலில் அவர் இரண்டு மகள்களின் தாயாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சிறந்த நடிகை விருது பெற்ற சோனியா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக அறியப்படுகிறார். சோனியா இந்த சீரியலில் நடிகர் அபிஷேக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

publive-image

சோனியா போஸ்

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பல தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இந்த புதிய சீரியலின் துவக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment