ரஹ்மான் "பயிற்சி பெற்ற பாடகர் அல்ல" ஆனால் "அவரது குரலின் தொனி மிகவும் இனிமையானது" ரஹ்மான் கூட தான் ஒரு சிறந்த பாடகர் அல்ல என்பதை ஒப்புக்கொள்வார் என்று சோனு நிகம் கூறியுள்ளார்.
Read In English: Sonu Nigam says ‘AR Rahman’s voice is not great’ but compliments his generosity as a composer: ‘He allowed me to compose’
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாரளாக பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1990-களின் தொடக்கத்தில் இசையமைப்பாளாக தனது பயணத்தை தொடங்கிய ரஹ்மானுடன், இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இவர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றனர். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முறை திறமை கொண்ட சோனு நிகம், ஏ.ஆா.ரஹ்மானின பல பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
O2 இந்தியாவுடனான சமீபத்திய ஒரு நேர்காணலில், பேசிய சோனு நிகமிடம், ரஹ்மானை ஒரு பாடகராக எப்படி மதிப்பிடுவீர்கள் என்று சோனுவிடம் கேட்கப்பட்டது, இதற்கு பதில் அளித்த அவர், "வெளிப்படையாக, அவர் மிகவும் பயிற்சி பெற்ற பாடகர் அல்ல. அவரது குரலின் தொனி மிகவும் இனிமையானது. அவர் கூட தன்னை ஒரு சிறந்த பாடகர் என்று சொல்லிக்கொள்ள மாட்டார். அதனால் நாம் என்ன சொல்ல முடியும்?
அவரது குரல் அமைப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும், ஆனால் அவர் ஒருபோதும் தன்னை ஒரு சிறந்த பாடகர் என்று கூறவில்லை. அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர், எனவே அவர் எப்போதும் சுரில் இருக்கிறார். முக்கிய விஷயம் சுரில் இருப்பதுதான். "சுர் இல் இல்லாத ஒருவர் நல்ல குரல் அமைப்பில் இருந்து என்ன பயன்? அவரது குரல் சிறப்பாக இருக்காது, ஆனால் அவர் ஏ.ஆர். ரஹ்மான் என்பதால் அவர் எப்போதும் தாளமிட்டுக்கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.
ரஹ்மானின் பாடலைப் பற்றி கருத்து தெரிவித்த சோனு, ஜோதா அக்பர் பாடலான "இன் லம்ஹோன் கே டாமன் மெய்ன்" பாடலின் ஒரு சிறிய பகுதியை இசையமைக்க ரஹ்மான் தாராளமாக என்னை அனுமதித்தார், ரஹ்மான் இந்த பாடலை நீ எப்படிப் பாடுவாய் என்று கேட்ட பிறகு, பாடலின் இறுதியில் ஒரு சிறிய பகுதியை நிகம் தானே இசையமைத்ததாக கூறியுள்ளார். "அவர் அந்த பகுதியை இசையமைக்க எனக்கு அனுமதி அளித்தார். இசையமைத்து முடித்தவுடன் ரஹ்மானுக்கு அந்த இசை மிகவும் பிடித்து போன, அதை பாடலின் ஒரு பகுதியாக வைத்திருக்க முடிவு செய்தார்.
"அவர் இரண்டு விஷயங்களை மாற்றியிருக்கலாம், ஆனால் முழு பாடலும் தயாராக இருந்ததால் இந்த சிறு பகுதிக்கு இசையமைக்க, என்னை அவர் அனுமதித்தார். பாடல் ஆசிரியர் ஜாவேத் சாப் இந்த வரிகளை பின்னர் அனுப்பினார். இசையமைத்த பின் அந்த வரிகள், சேர்க்கப்பட்டன. எனவே முதலில் நாங்கள் முழு பாடலையும் பாடினோம், பின்னர் இந்த பகுதி தனியாக அமைக்கப்பட்டது. அவர் மிகவும் பாதுகாப்பானவர். நான் எதை செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று சொல்பவர் அல்ல என்று சோனு பகிர்ந்து கொண்டார். சோனு இசையமைத்த பகுதி பாடலின் இறுதியில் வருகிறது, மேலும் இது பெரும்பாலும் எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.