Sonu Sood news Sonu Sood real heroism: நடிகர் சோனு சூட் அடுத்தடுத்த சேவைகளால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வரும் சோனு சூட் மக்களிடையே ரியல் ஹீரோவாக மாறிவருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்து வந்தனர்.இதைக் கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட், தனி விமானம் மூலம் அவர்களை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார். அதன்படி, நேற்று (5.8.2020) அதிகாலை அனைவரும் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். சோனு சூட்டின் இந்த செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து இருந்தார். அதன்படி 200 பேர் செல்ல கூடிய விமானத்தில் 91 தமிழர்கள் வந்த நிலையில், 109 காலி டிக்கெட்டுகளை சோனு சூட் சொந்த காசில் வாங்கியுள்ளார். மாணவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை சொந்த காசில் எடுத்துள்ளனர். இதனால் விமான நிறுவனம், சிறப்பு விமானத்தை இயக்கி உள்ளது. இதன் மூலம் அந்த மாணவர்களை சோனு சூட் சென்னை கொண்டு வந்து இருக்கிறார்.நேற்று காலை எல்லோரும் சென்னை வந்தனர்.
ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
வாழ்வதாரத்திற்காக ரோட்டில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் தற்போது ஹீரோவாக மாறி விட்டார் நடிகர் சோனு சூட்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil