‘சூரரைப் போற்று’ லட்சியப் பெண் அபர்ணா கேரக்டர் உருவானது எப்படி? வீடியோ
சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் பற்றி விவரித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரியா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில், சூரியாவின் கதாபாத்திரம் அளவுக்கு தொழில் முனைவோராகும் லட்சியப் பெண்ணாக அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதா பாத்திரமும் பாராட்டுதல்களைப் பெற்றது. சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் பற்றி விவரித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Advertisment
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நவம்பர் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. டெக்கான் ஏர் நிறுவனத்தை தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரமாக சூரியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல, இந்த படத்தில், சூரியாவின் மனைவியாக நடித்த, அபர்ணா பாலமுரளி தொழில்முனைவோராகும் லட்சியப் பெண்ணாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேக்கரி தொடங்க வேண்டும் என்ற தனது லட்சியத்தை விடாமல் சாதிக்கும் பொம்மி கேரக்டர், வழக்கமான தமிழ் சினிமாக்கள் காட்டும் வெகுளிப் பெண், அசட்டுப் பெண்ணாக இல்லாமல் சுய மரியாதை உள்ள பெண் கதாபாத்திரமாக படைத்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அபர்ணா பாலமுரளி, சிறப்பாக நடித்து பொம்மி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவானது குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அபர்ணா பாலமுரளி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் காட்டப்பட்டுள்ளது.
அபர்ணா சூரரைப் போற்று படத்தில் நடிப்பது குறித்து, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று ஷூட்டிங் செல்லும் வரை எனக்கு உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
படத்தில், ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ள பூர்ணிமா கூறுகையில், இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று நாங்கள் தனியாக பார்க்கவில்லை. எல்லோரையும் சரிசமமாகத் தான் நடத்தினோம். 90-களைச் சேர்ந்த பெண் தான் பொம்மி கதா பாத்திரம். அப்போதே அந்தக் கதாபாத்திரம் ஒரு தொழில் முனைவோராக இருக்கும்.” என்றும் அந்தக் கதாபாத்திரத்துக்கு கொடுத்த உடைகள் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil