Soorarai Pottru : இந்த வருட தீபாவளிக்கு அமேசான் ப்ரைமில் வெளியானது சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று. சிம்ப்ளி ஃப்ளை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை இயக்கி இருந்தார் சுதா கொங்கரா. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் அந்த படத்தில் நடித்திருந்தனர். ஏர் டெக்கான் நிறுவனத்தி தலைவர் கேப்டன் கோபிநாத்தாக இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா.
வருகின்ற ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. 52 பிறமொழிப்படங்களில் தமிழ் திரையுலகில் இருந்து இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
Asuran : தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் திரையிடப்படுகிறது.
இது மட்டுமின்றி, ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படமும் கோல்டன் க்ளோப்பில் திரையிடப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Soorarai pottru asuran malayalam movie jallikattu will be screened at the golden globes
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்