soorarai pottru first look suriya sudha kongara gv prakash - 'சூரரைப் போற்று' ஃபர்ஸ்ட் லுக் - சூர்யாவின் ஆட்டம் இனி தான் இருக்கு!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று(நவ.10) வெளியாகியுள்ளது.
Advertisment
சுதா கொங்கரா இயக்கி வரும் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து குனித் மோங்காவும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் சூர்யாவுடைய ஃபர்ஸ்ட் லுக்கை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கு முந்தைய படங்கள் தொடர்ந்து சூர்யாவுக்கு சரியாக செல்லவில்லை. காப்பான் படமும் சூர்யாவை காக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் போற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.