Soorarai Pottru Full Movie Leaked By TamilRockers: சூரரைப் போற்று முழுப் படத்தையும் ஆன் லைனில் பைரசி வெப்சைட்டுகள் லீக் செய்துள்ளன. குறிப்பாக சினிமாத் துறையை படாதபாடு படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ், ஓடிடி-யில் வெளியாகும் படங்களையும் உடனுக்குடன் வெளியிட்டு பட வெளியீட்டாளர்களை அதிர வைக்கிறது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாரான படம் சூரரைப் போற்று. கடந்த அக்டோபரில் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இந்தப் படம், கொரோனா காரணமாக தாமதமானது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே சூர்யா ஆர்வமாக இருந்தார்.
TamilRockers Leaked Soorarai Pottru Full Movie To Free Download Illegally: சூரரைப் போற்று படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்
Advertisment
Advertisements
ஆனால் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் திறப்பு தள்ளிக்கொண்டே போனதால், ஓடிடி-யில் வெளியிட ஒப்புக்கொண்டார். விஜய்யின் மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட விஜய் தரப்பு ஒப்புக் கொள்ளாததால், ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படத்தை திரையிட்டு சினிமா மார்க்கெட்டை தங்கள் பக்கம் திருப்ப வேண்டிய நெருக்கடியில் ஓடிடி நிறுவனங்கள் இருந்தன.
இந்தச் சூழலில்தான் சூரரைப் போற்று படத்தை 45 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ15 கோடிக்கு பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்திருக்கும் வெளியீட்டாளர்களை அதிரவைக்கும் விதமாக பைரசி வெப்சைட்கள் ரிலீஸான சூட்டோடு சூடாக சூரரைப் போற்று திரைப்படத்தை சட்டவிரோதமாக தங்கள் இணையதளங்களில் வெளியிட்டன.
முன்பாவது தியேட்டர்களில் இருந்து ‘காபி’ செய்ய வேண்டியிருந்ததால், திருட்டு இணையதளங்களில் படங்களில் குவாலிட்டி சுமாராக இருந்தது. இப்போது ஆன்லைனில் ஓடிடி தளங்களில் இருந்து திருடுவதால், திருட்டு இணையதளங்களும் அதே ஹெச்.டி தரத்தில் புதிய படங்களை கொடுத்து விடுகின்றன.
புதிய படங்களை இப்படி வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை தடுக்க திரையுலகம் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலிக்கவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட இந்த விஷயத்தில் நிர்வாகங்களால் செயல்படுத்த முடியவில்லை.
தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் அடிக்கடி தங்கள் முகவரியை மாற்றிக்கொண்டு இது போல புதுப்படங்களை வெளியிடுகின்றன. இந்த புதிய முகவரிகளை சமூக ஊடகங்கள் மூலமாக பலருக்கும் பரவச் செய்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் இதற்காகவே குவியும் வாடிக்கையாளர்கள் மூலமாக அவை பெருமளவில் விளம்பர வருமானங்களை அள்ளுகின்றன.
இந்த இணையதளங்களை சட்ட விரோதமானவையாக அறிவித்து, அதில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டும் என்பது திரைத்துறையின் கோரிக்கை. பைரசி வெப்சைட்களைக் கடந்தும் சூரியா ரசிகர்கள் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்குவார்கள் என்கிற நம்பிக்கையில் வெளியீட்டாளர்கள் இருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"