சூரரைப் போற்று சாதனை: இணையத்தில் வெளியானதை மீறி ‘வியூஸ்’களை குவிக்கிறது
Soorarai Pottru Beats Tamilrockers: ரசிகர் பலம் அமைந்தால், எந்த திருட்டு இணையதளங்களாலும்கூட அந்தப் படத்தை முறியடிக்க முடியாது என்பதை சூரரைப் போற்று நிரூபித்திருக்கிறது.
Soorarai Pottru vs Tamilrockers: பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், இணையத்தில் வெளியானதை மீறி வியூஸ்களை வாரிக் குவிக்கிறது. அமேசான் பிரைமில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் இதுவே அதிக பார்வையாளர்களைப் பெற்றதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
Advertisment
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 12-ம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த அக்டோபரில் வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா பேண்டமிக் காரணமாக தாமதமானது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வமாக இருந்தார் சூர்யா. எனினும் தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தியேட்டர்களை திறப்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால், ஓடிடி-யில் வெளியிட சம்மதித்தார்.
Tamilrockers Leaked Soorarai Pottru: சூரரைப் போற்று படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மற்றும் சில பைரசி வெப்சைட்கள் இந்தப் படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே திருடி தங்கள் இணையதளங்களில் வெளியிட்டன. எனவே அமேசான் பிரைம் இந்தப் படத்தை அவசரமாக தங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பைரசி வெப்சைட்கள் தங்கள் இணையதளங்களில் முழுப் படத்தையும் அதே ஹெச்.டி தரத்தில் வெளியிட்டதால், அமேசான் பிரைமில் வியூஸ் பாதிக்குமோ? என பட வெளியீட்டாளர்கள் அஞ்சினர். ஆனால் ‘அஞ்சான்’ ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸையும் மீறி சூரரைப் போற்று திரைப்படத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
அமேசான் பிரைமில் முதல் நாளில் மட்டும் 55 மில்லியன் பேர் இந்தப் படத்தை பார்த்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 100 மில்லியன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் முதல் பிளாக் பஸ்டர் படம் என இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
தவிர, இதுவரை அமேசான் பிரைமில் வெளியான தமிழ்ப் படங்களின் மொத்த வியூஸ்களை சூரரைப் போற்று மிஞ்சியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சிறந்த படமாகவும் இருந்து, ரசிகர் பலமும் அமைந்தால், எந்த திருட்டு இணையதளங்களாலும்கூட அந்தப் படத்தை முறியடிக்க முடியாது என்பதை சூரரைப் போற்று நிரூபித்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"