Actor Surya's Soorarai Pottru Tamil Movie Review : பல்வேறு விதமான எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளைக் கடந்து ஒரு வழியாக 'சூரரைப் போற்று' திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கோலிவுட் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
பல கிராமங்களுக்கு சரியான மின்சார வசதியும் பேருந்து வசதிகளும்கூட கிடைக்காத தற்போதைய காலகட்டத்தில், அவர்கள் விமானத்தில்கூட செல்லலாம் என்பதை உணர்வுப்பூர்வமாக வழங்கியிருக்கிறார் சுதா. குறைந்த கட்டண விமான சேவையை அனைவருக்கும் வழங்குவதற்கான ஓர் உறுதியான லட்சிய மனிதனின் வழக்கமான கதைதான் என்றாலும் தனி நபராக அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல கார்பொரேட் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. லைசென்ஸ் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கும் ஹீரோ எப்படி தன் லட்சியத்தை அடைகிறார் என்பதே கதைச் சுருக்கம்.
கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் தொழில்முனைவோர் பயணத்தின் கரு 'சூரரைப் போற்று'. 'நெடுமாறன் ராஜாங்கம்' எனும் கதாபாத்திரத்தைச் சுதா கொங்கரா வடிவமைத்த விதம் அழகு. அந்த மைய கதாபாத்திரத்தைக் கொஞ்சமும் மிகைப் படுத்தாமல், உடல் ரீதியாகவும், அர்ப்பணிப்பு மிக்க நடிப்பாலும் உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் சூர்யா. விமான சேவை நிறுவனம் முதல் மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி வரை எல்லா இடங்களிலும் காணப்படும் விரிசல்களை ஹைலைட் செய்து காட்டியிருக்கிறார்கள்.
பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை பகிர்ந்துவரும் இந்த வேளையில், தியேட்டர் அனுபவத்தை மிகவும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Soorarai Pottru Tamil Movie Review : 'சூரரைப் போற்று' திரைப்படம் குறித்த ரிவ்யூ, பிரபலங்களின் ட்வீட் உள்ளிட்ட அனைத்து அப்டேட்களையும் உடனடியாக தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்
நடிகை வரலட்சுமி சரத்குமார், சூரரைப் போற்று படத்தைக் குறிப்பிட்டு ஆல் தி பெஸ்ட் சார் என்று நடிகர் சூரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Alllllll the bestttttt sirrr....!!!! https://t.co/5QDjQlTBiH
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) November 12, 2020
நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்டரில், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, என்னுடைய தந்தையுடன் படம் பார்க்கும் நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், விஜயும் விஜய் மகள் திவ்யா ஷாஷாவும் சூரரைப் போற்று படத்தை பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
Movie tym with my DaD😍 @actorvijay pic.twitter.com/MgQkVprVE6
— Divya Shasha Vijay 🏸 (@shasha_vijay) November 11, 2020
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இயக்குனர் சுதா கொங்காரா மற்றும் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று படம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம்” என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#SooraraiPottruOnPrime
- A Film to be celebrated from Dir.#SudhaKongara @Suriya_offl sir @gvprakash @Aparnabala2 @2D_ENTPVTLTD @rajsekarpandian & Team ... here's my film appreciation in @CinemaCentralYT on why it deserves it. 👍👍👍👌👏https://t.co/VsjEIXIUJ7— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) November 12, 2020
நகைச்சுவை நடிகர் யோகி பாபு, 2020ன் சிறந்த படங்களில் ஒன்றான சூரரைப் போற்று திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீங்கள் வெற்றி அடைந்துவிட்டீர்கள் சூர்யா. மிகச் சிறந்த நடிப்பு” என்று தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய்
கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது. வாழ்த்துகள்.. மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில்
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..@Suriya_offl@Sudhakongara_of pic.twitter.com/Oys1mG0p6C— Bharathiraja (@offBharathiraja) November 12, 2020
"சூரரைப் போற்று திரைப்படம் ஓர் புதிய அனுபவம். இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆன்மாவைத் தொடும். சூர்யா சார் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ப்ரேமிலும் சுதா மேமின், கடின உழைப்பை என்னால் காண முடிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை தனித்தன்மையாக இருக்கிறது. இந்த தீபாவளிக்கு விஷுவல் ட்ரீட் ஆக இந்தப் படம் இருக்கும்" என இயக்குநர் பாண்டிராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சூரரைப் போற்று ஓர் வெற்றிக் கதை. படத்தில், போராட்டம் மற்றும் வெற்றியில் சூர்யாவின் நடிப்பு முழுமை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூர்யா. சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், ராஜசேகரபாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துகள்" என கே.வி.ஆனந்த் ட்வீட் செய்திருக்கிறார்.
"கனவுகளை சுமந்து வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன்னம்பிக்கை பாடம் நடத்தியிருக்கிறார் சூர்யா.
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
புகைப்பிடித்தலின் தீமையை சொன்னதற்கு சிறப்பு நன்றி" எனக்கூறி திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் சரவணன் ட்வீட் செய்துள்ளார்.
கனவுகளை சுமந்து வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன்னம்பிக்கை பாடம் நடத்தியிருக்கிறார் சூர்யா.
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
புகைப்பிடித்தலின் தீமையை சொன்னதற்கு சிறப்பு நன்றி.💐@Suriya_offl #சூரரைப்போற்று #suraraipotru pic.twitter.com/99hFhCBtNu
— Arjun Saravanan (@ArjunSaravanan5) November 12, 2020
And we're live! https://t.co/4r6SnykMZL#SooraraiPottruOnPrime, now on @PrimeVideoIN#SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @2D_ENTPVTLTD @SonyMusicSouth pic.twitter.com/kmxZazy01V
— Suriya Sivakumar (@Suriya_offl) November 11, 2020
'சூரரைப் போற்று' ப்ரீமியரைப் பற்றி ஓர் காணொளியுடன் சூரியா அறிவித்திருக்கிறார். 'நாங்கள் வந்துவிட்டோம்!' என்ற கேப்ஷனையும் இணைத்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights