/tamil-ie/media/media_files/uploads/2020/07/Soorarai-Pottru-song-759.jpg)
சூரறைப் போற்று திரைப்படம்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வியாழக்கிழமை நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூரறைப் போற்று படத்தின், ’காட்டு பயலே’ பாடலின் ஒரு காட்சியை வெளியிட்டார். சூர்யாவின் 45-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த பாடலின் வீடியோ ப்ரோமோவாக வெளியிடப்பட்டது.
ஏரியில் மீன் பிடித்த விமல் சூரி: வனக்காவலர்கள் சஸ்பெண்ட்
இந்த நாட்டுப்புற காதல் பாடல் உடனடியாக விரும்பத் தக்க வகையில் அமைந்துள்ளது. சூர்யாவிற்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான இயல்பான கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. இயக்குனர் சுதா கொங்கரா இந்த பாடலில் ஹீரோ/ஹீரோயினை பாரம்பரிய பாத்திரங்களாக காட்டியுள்ளார். துவைத்த துணிகளை காய வைக்கும் போதும், சமையலறையில் பிஸியாக சமைக்கும் போதும், அந்த ஆண் மீதான தனது அன்பை வெளிப்படுத்துகிறாள் பெண். இந்தப் பாடல் இதுவரை 2 மில்லியன் பார்வைகளைப் பெற்று, யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லாவிட்டால், சூர்யாவின் ’சூரறை போற்று’ திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும். முன்னதாக இந்தப் படத்தின் டீஸர் பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இதனை பார்வையாளர்கள் அதிகம் விரும்பினர். இருப்பினும், இந்த ஆண்டு வெளியீட்டு தேதியை தீர்மானிக்க முடியாது என்பதால், படம் அடுத்த ஆண்டு மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கணவர்… குடும்பம்.. சீரியல்.. அரண்மனை கிளி ஜானு பற்றி தெரியாதவை!
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஓய்வுபெற்ற இராணுவத் தலைவரான ஜி.ஆர். கோபிநாத்தின் போராட்டங்களை தழுவி சூரறை போற்று இயக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த விளையாட்டு படமான, ’இறுதி சுற்று’ படத்தில் முத்திரையைப் பதித்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.