Advertisment

அடுத்தடுத்து ஹீரோ படங்கள்... சம்பளத்தை உயர்த்திய சூரி... கருடன் படத்துக்கு இத்தனை கோடியா?

விடுதலை படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தில் சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Soori Garudan

நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருடன் திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ் சினிமா வரலாற்றில் இது வரை தான் இயக்கிய எல்லா படங்களையும் வெற்றி படங்களாகக் கொடுத்து, வெற்றிகளை மட்டுமே குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன், கடைசியாக அவர் இயக்கிய 3 படங்களும் அரசியல் படங்கள் என்று கூறலாம். வெற்றிமாறன் வித்தியாசமான கதைகளின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக உள்ளார்.

வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கிய, விடுதலை திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் என்றால் அது மிகையல்ல. விடுதலைப் படத்தில் சூரியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. படத்தில், சூரி ஒரு போலீஸ்காரராகவே மாறி இருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சூரி, நகைச்சுவை நடிகராக உயர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராஜ மாறிய நிலையில், விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படத்தில் வழக்கமான ஒரு நகைச்சுவை நடிகராக இல்லாமல, குமரேசன் என்ற போலீஸ்காரராக ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்தார். 

விடுதலைப் படத்தில், நடிகர் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்தார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன் என பலர் நடித்திருந்தனர். 

விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து புரோமோஷன் பெற்ற சூரி, தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாரா? அல்லது மீண்டும் நகைச்சுவை நடிகராகத் தொடர்வாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், நடிகர் சூரி, இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் கருடன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தைப் பெற்றுள்ளார். கருடன் படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தப் படத்தில் சூரி உடன், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். 

கருடன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு, படத்தின் டிரைலரே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு காரணம், இந்த படத்தில் சூரி பேசும் வசனம், “நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு” என்பது ரசிகர்களைக் கவர்ந்தது.

கருடன் படத்தில் நடிகர் சூரி, சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் கருணா நண்பனாக நடித்துள்ளார் சூரி. விடுதலை படத்தைப் போல இந்த படத்திலும், ஆக்ஷன் காட்சியிலும், எமோஷன் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். 

கருடன் படத்தின் புரோமோஷனில் பேசிய நடிகர் சூரி,  “காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம், ஆனால், கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது” என்ரு கூறினார்.

இந்நிலையில், கருடன் திரைப்படத்தில் நடித்த சூரி, இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில், துணை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சூரி, நகைச்சுவை நடிகராக தன்னை நிரூபித்தார். விடுதலைப் படத்தில் ஹீரோவானார். சினிமாவில் படிப்படியாக உயர்ந்துள்ள சூரி, அடுத்தடுத்து ஹீரோவாக நடித்துள்ளார். கருடன் படத்தில் நடித்ததற்காக, ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் மலைக்க வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Soori
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment