/indian-express-tamil/media/media_files/2025/04/19/66QEdnAVb2fqx80dudVv.jpg)
சூரி நடிக்கும் "மண்டாடி" படத்தின் மிரட்டல் பர்ஸ்ட் லுக்.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய "விடுதலை பாகம் 1" படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து, கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதற்கிடையில் இவர் "விலங்கு" வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெயின் சண்டை காட்சிகளை அமைக்க, கிரண் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்கள்.
கடலில் மீன்பிடிக்க செல்லும்போது எங்கெங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து சொல்பவரே மண்டாடி என்பார்கள். மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்பி படத்தினை இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்க்கும்போது படகு போட்டிகள் தொடர்பான கதைக்களம் போல் தெரிகிறது.
A game of ropes, rage, and revenge ⛵🔥🌊#Mandaadi#MandaadiFirstLook@ActorSuhas@elredkumar@rsinfotainment#VetriMaaran@MathiMaaran@gvprakash@Mahima_Nambiar#Achyuthkumar@RavindraVijay1@sachananamidass#sathyaraj@PeterHeinOffl#Azar@srkathiir@KiranDrk@pradeepERagav… pic.twitter.com/IHJfULP1Vl
— Actor Soori (@sooriofficial) April 19, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.