கூலி வசூல் கொண்டாட்டம்; வில்லன் சவுபின் ஷாகிர் வாங்கிய புதிய கார்: விலை இத்தனை கோடியா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாஹிர் ஒரு சொகுசு காரை வாங்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாஹிர் ஒரு சொகுசு காரை வாங்குகிறார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-19 104134

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு கலக்கு கலக்கியுள்ளது. 

Advertisment

இந்தப் படம் முதல் நாளில் ₹151 கோடி வசூலித்தது. ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் லோகேஷின் நவநாகரீக படைப்புகளும் இணைந்து உருவாக்கிய எதிர்பார்ப்பு தான் இதற்குக் காரணம். 

ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றங்களில் தோன்றினாலும், மலையாள நடிகர் சவுபின் ஷாஹிரின் வில்லன் வேடம் மட்டுமே அதில் அதிகம் பேசப்பட்டது. 

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையேயும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

சவுபின் ஷாஹிர் சமீபத்தில் அதிரடியாக ஒரு வேலையை செய்திருக்கிறார், அது ரசிகர்களைக் கவர்ந்தது. அவர் ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார்.

 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு ஒரு கார் பரிசாக வழங்கினர், ஆனால் சௌபின் ஷாஹிர் தனது அற்புதமான நடிப்பிற்காக தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு பரிசை எதிர்பார்க்காமல் அதை தானே வாங்கியுள்ளார்.

தமிழ்த் திரையுலகிலும் தனது படைப்புகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்திய சௌபின் ஷாஹிர், சந்தேகத்திற்கு இடமின்றி தனது நடிப்பால் ரசிகர்களின் இதயங்களையும், தனது புதிய காரின் மூலம் தலைப்புச் செய்திகளையும் வென்றுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம், அவரது தனித்துவமான பாணி மற்றும் வெகுஜன மக்களை ஈர்க்கும் கவர்ச்சி முத்திரைகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், பலரும் இப்படத்தில் புதுமை இல்லையென்றும், கதை ஒரு பழைய பழிவாங்கும் டம்ப்ளேட்டில் நகர்ந்ததுபோல இருந்ததாகவும் விமர்சனம் செய்தனர். சுவாரஸ்யமற்ற திரைக்கதை சிலரிடம் ஏமாற்றத்தையும் உருவாக்கியது.

எனினும், இந்தப் படத்தின் ரசிகர்களை சுலபமாக கவர்ந்த ஒரு விஷயம் தான் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிரின் வில்லன் நடிப்பாகும். 

மலையாள சினிமாவில் தனது மென்மையான நடிப்பால் தனக்கென ஒரு தனி முத்திரை பதிந்த அவர், ‘கூலி’யில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வில்லனாக நடித்துள்ளார். அவரது கூர்மையான பார்வை, அழுத்தமான உரையாடல் முறைகள் என்று அணைத்து விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மொத்தத்தில், ‘கூலி’ அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தாலும், அதன் உண்மையான உயிர் சௌபின் ஷாஹிரின் சில்லத்தனமான நடிப்பு என்றே கூறலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: