scorecardresearch

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: சவுந்தர்யா ரஜினிகாந்த் ரியாக்ஷன்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் படத்தை மாற்றி தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: சவுந்தர்யா ரஜினிகாந்த் ரியாக்ஷன்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக நேற்றிரவு சமூக வலைதளம் வாயிலாக அறிவித்தனர். சுமார் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தததாக அறிவித்திருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருவரும் பிரிந்து செல்வதற்கான முடிவு குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் படத்தை மாற்றி தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதில், தானும் தனது அக்கா ஐஸ்வர்யாவும் தங்களின் அப்பா ரஜினிகாந்தின் மடியில் அமர்ந்து அவரை கட்டிப்பிடித்தப்படி இருக்கும் சிறிய வயது போட்டோவை வைத்துள்ளார். அந்த படத்திற்கு, NewProfilePic என பதிவிட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டில், தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரிடமிருந்து பிரிந்த செளந்தர்யா, 2019-ல் விசாகன் வணங்காமுடியை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி, சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரது முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் திடீரென விவாகரத்து முடிவை அறிவித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Soundarya changed profile picture to support aishwarya