நடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்?

சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஷ்வின் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ‘வேத்’ என்ற ஒரு மகன் உள்ளான்.

சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா, தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் சமீபத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close