சவுந்தர்யா ரஜினிகாந்தின் மெகா படைப்பு! வெப் சீரிஸில் ‘பொன்னியின் செல்வன்’!

சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியம்

பொன்னியின் செல்வன் நாவலை எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனம் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மென்ட் இணைந்து வெப் சீரிஸாக உருவாக்க உள்ளது. இந்த வெப் சீரிஸ் 10,11 நூற்றாண்டுகளின் சோழ சாம்ராஜ்ய பேரரசான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையைப் பற்றிய சரித்திர எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி உருவாக இருக்கிறது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு முறைப்படி இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “இது எனது கனவு திட்டம்!!! … இந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி. இதற்காக May 6 Entertainment மற்றும் MX Player ஆகியோருடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் MX ஒரிஜினல் வெப் சீரிஸாக வெளியாகப் போகிறது. இந்த வலைத்தொடர் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இருக்கும். கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எக்ஸ். பிளேயரின் தலைமை நிர்வாக அதிகாரி கரண்பேடி கூறுகையில், “இணைய உலகில் தடம் பதிக்கும் சவுந்தர்யாவுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவருடைய தனித்துவமிக்க, பிரமாண்டமான தொலைநோக்குப் பார்வையுள்ள அணுகுமுறை அசாத்தியமாகவுள்ளது. இணைய பார்வையாளர்களை இந்தப் படைப்பு ஈர்க்கப்போவது உறுதி” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Soundarya rajinikanth ponniyin selvan web series

Next Story
பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த தல அஜித்.. விஸ்வாசத்தின் உலக வசூல்!viswasam box office
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express