ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த பேரன்: ராயன் ரிலீஸ் நாளில் மாஸ் காட்டிய ரஜினி

இந்த விஷயத்தை சவுந்தர்யா தன் அப்பாவிடம் சொல்ல, உடனே மகள் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், தனது பேரனை சமாதானப்படுத்தி அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த விஷயத்தை சவுந்தர்யா தன் அப்பாவிடம் சொல்ல, உடனே மகள் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், தனது பேரனை சமாதானப்படுத்தி அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Rajini grandson

Rajini with grandson

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.

Advertisment

இவர் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான்என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். பிறகு அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து கேங்ஸ் வெப்சீரிஸ் தயாரித்தார்.

சவுந்தர்யா இன்ஸ்டா போஸ்ட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுந்தர்யாவின் மூத்த மகன் வேத் கிருஷ்ணா, இன்று பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இந்த விஷயத்தை சவுந்தர்யா தன் அப்பாவிடம் சொல்ல, உடனே மகள் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், தனது பேரனை சமாதானப்படுத்தி அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

Advertisment
Advertisements

அங்கு வகுப்பில் ரஜினிகாந்தை பார்த்த சக பள்ளிக் குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை சவுந்தர்யா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இன்று தனுஷ் நடிப்பில் ராயன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எப்போதும் இல்லாத வகையில் ரஜினியின் இந்த திடீர் ஸ்கூல் விசிட் அமைந்துள்ளது

மறுபுறம் ரஜினி, நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி உள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.

இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: