Soundarya Rajinikanth Wedding with Vishagan Vanangamudi: சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று (பிப்.11) திருமணம் நடைபெற இருக்கிறது.
ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், அஷ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபருக்கும் கடந்த 2010ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு சவுந்தர்யா விவாகரத்து பெற்றார்.
மேலும் படிக்க - Soundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனும், சவுந்தர்யாவும் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். விசாகனும், தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.
விசாகன் - சவுந்தர்யா திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த பிப்.8ம் தேதி நடைபெற்றது. மிக முக்கியமான பிரபலங்களுக்கும், ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து ரஜினி திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
Soundarya Rajinikanth - Vishagan wedding Live Updates: சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் லைவ்
12:00 PM - நேரில் வாழ்த்திய மு.க.ஸ்டாலின்
சமீபத்தில் இந்துக்களின் திருமண முறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின், இந்து முறைப்படி நடந்த ரஜினி மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
11:15 AM - மணமக்களை வாழ்த்திய வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
10:15 AM - துணை முதல்வர் வாழ்த்து
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், கமல்ஹாசன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் பிரபு, வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
09:15 AM - முதல்வர் வருகை
விசாகன் - சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் எஸ்.ப்.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
09:05 AM - சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்
Blessed & grateful beyond words !!!! The three most important men in my life ... my darling father ... my angel son ... and now you my Vishagan ❤️❤️❤️???????????????????????? pic.twitter.com/v7Ra32oiYe
— soundarya rajnikanth (@soundaryaarajni) 10 February 2019
8:45 AM - இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நடக்கிறது. மிக முக்கிய குடும்ப நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு ரஜினிகாந்த் அழைத்திருக்கிறார். அதே லீலா பேலஸில் பகல் 11 மணி முதல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.