Soundarya Rajinikanth family at Tiruchendur Murugan Temple Tamil News
க.சண்முகவடிவேல்
Advertisment
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வகையில், இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
முதலில் சண்முக விலாசத்தில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மூலவர் சன்னதி சண்முகர் சன்னதி பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரஜினியின் மகள் வந்ததை அடுத்து திருச்செந்தூரில் ரஜினியின் ரசிகர்கள் திரண்டனர்.