ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு பிப்.10ம் தேதி திருமணம்

சவுந்தர்யா திருமணம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனை 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, சென்னையை சேர்ந்த தொழிலதிரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு மகன் வேத், குடும்பம் மற்றும் திரைப்படம் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் :

இந்த நிலையில், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகன் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்ய இருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் சமீபத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் முடிவு செய்து, கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். திருமணம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த திருமணம் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர். திருமணத்துக்காக வீட்டை அலங்கரிக்கும் பணிகள் நடக்கின்றன.

சமீபத்தில், திருமண அழைப்பிதழை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து சவுர்ந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Soundarya rajinikanth wedding on february 10 visakan

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express