Rajinikanth Daughter Soundarya - Vishagan Vanagamudi Marriage Photos: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம் இன்று (பிப்ரவரி 11) சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினியின் திரையுலக நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட அரசியல், திரை பிரபலங்கள் பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
ரஜினிகாந்தே ஒவ்வொரு நிகழ்விலும் முன்னால் நின்று வி.ஐ.பி.க்களை வரவேற்பதும், வழியனுப்பி வைப்பதுமாக இருந்தார். மணமகன் விசாகன் வணங்காமுடி குடும்பத்தினரும் முழு உற்சாகமாக இந்த நிகழ்வில் காணப்பட்டனர்.
soundarya rajinikanth wedding pictures: சவுந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் வணங்காமுடி திருமண புகைப்படங்கள்
சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் வணங்காமுடி திருமண புகைப்படங்கள் மீடியாவையும், சமூக வலைதளங்களையும் இன்று முழுமையாக ஆக்கிரமித்தன. ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த விழாவில் பெருமளவில் பங்கேற்கும் வாய்ப்பை பெறாவிட்டாலும், மணமக்களை சமூக ஊடகங்கள் மூலமாக வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் பலரையும் கவர்ந்த இன்னொரு அம்சம், சவுந்தர்யா தனது மகன் வேத்-துக்கு கொடுத்த முக்கியத்துவம்! திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள், செய்திகள் அனைத்திலும் வேத், விசாகன், சவுந்தர்யா ஆகிய 3 பெயர்களையும் ஹேஷ்டேக்காக இணைத்தார்.
திருமணத்திற்கு முந்தைய நாள், ‘எனது வாழ்வின் முக்கியமான ஆண்கள்’ என குறிப்பிட்டு அதிலும் தனது தந்தை ரஜினிகாந்த், தனது மகன் வேத், கணவர் விசாகன் ஆகிய மூவரையும் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
பொதுவாக திருமணம் என்பது இருமனம் இணைகிற விழா. ரஜினி இல்லத்தில் சவுந்தர்யாவின் மகன் வேத்-துடன் சேர்த்து 3 மனங்கள் இணையும் இனிய விழாவாக அது அமைந்தது.