திருமணமான 4 மாதத்தில் நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். இது குறித்த அறிவிப்பை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
Advertisment
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
இது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை வீச, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா குறித்து புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என்றும், கடந்த டிசம்பர் மாதம் வாடகை தாய் ஒப்பந்தம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டனர் என்றும் அந்தத் தகவல் நீள்கிறது.
Advertisment
Advertisements
நயன்தாரா
இதற்கிடையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது சட்டப்பூர்வ நடடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், இது சமூக சீரழிவுக்கு வித்திடும், இதைப் பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. ஆகவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி
நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
முன்னதாக, அமைச்சர் ம.சுப்பிரமணியன், நயன்தாரா-விக்னேஷ் சிவன் விஷயத்தில் தேவைப்பட்டால் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்கப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil