Advertisment

விராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்... ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
virat kohli, விராட் கோலி

virat kohli, விராட் கோலி

விராட் கோலி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் பிரபல தென் இந்திய நடிகர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

முழுசா விராட் கோலி போல மாறும் துல்கர் சல்மான்:

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பதவி வகித்து, புகழின் உச்சத்தை அடைந்த பல வீரர்களில் பெருமை இந்த நாடு முழுவதும் பேசப்படுகிறது. அந்த வகையில், கேப்டன் பதவியில் இருந்த மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு 2016ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. இதுவரை வெளியான விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாறு படங்களில் அதிக அளவிலான வசூலை எட்டியது எம். எஸ். தோனி படம் தான்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி வாழ்க்கை வரலாறு “ த ஸோயா பேட்கர் ” என்ற பெயரில் படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கான தேடல் பாதிக்கு பாதி பூர்த்தியடைந்தது. இருப்பினும், கோலி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகனுக்கான தேவை மட்டும் பூர்த்தி அடையாமல் இருந்தது.

துல்கர் சல்மான் துல்கர் சல்மான்

இந்நிலையில் நீண்ட நாள் தேடலுக்கு பின்னர் கோலி கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தென் இந்திய நடிகர் துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இந்த ஆண்டு மே மாதம் வெளியான ‘ நடிகையர் திலகம் ’ படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேஷன் பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli Dulquer Salmaan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment