/tamil-ie/media/media_files/uploads/2021/02/madonna-sebastian.jpg)
பிரேமம், காதலும் கடந்து போகும் போன்ற திரைப்படங்கள் மூலமாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த மடோனா செபாஸ்டியன் தனது இன்ஸ்டாக்ராம் கணக்கில் உருக்கமான பதிவை ஒன்று வெளியிட்டார்.
செபாஸ்டியன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மலையாளர் இசையைப்பாளர் மற்றும் நடிகர் ராபி ஆபிரகாமுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
மேலும், " உன்னைச் சந்தித்து 7 ஆண்டுகள் ஆகின்றன .. உன்னை அறிந்திருப்பதும், உனது அருகாமையில் இருப்பதும் பெரும் மகிழ்ச்சி. வாழ்க்கையின் ஓவ்வொரு கட்டத்திலும் உடன் நின்றத்திற்கு நன்றி. நீ உயர பறப்பாய் !! உனக்கான இடத்தை அடைவாய்! உனக்குள் பரந்தளவு ஆற்றலும், சக்தியும் உள்ளது! கடவுள் உன்னை என்றும் என்றும் ஆசீர்வதிப்பார்!" என்று பதிவிட்டார்.
மடோனா செபாஸ்டியன் 2015ஆம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.