இந்தியாவில் டாப் நயன்தாரா; அப்புறம் ஷாருக் கான்... இது என்ன ரேங்கிங்?

தற்போது வெளியாகியுள்ள ஐஎம்டிபியின் (IMDb) இந்த வாரத்தின் மிகவும் பிரபலமான இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் நயன்தாரா முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஐஎம்டிபியின் (IMDb) இந்த வாரத்தின் மிகவும் பிரபலமான இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் நயன்தாரா முதலிடம் பிடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayantara

நடிகை நயன்தாரா

சமீபத்தில் வெளியாகியுள்ள ஐஎம்டிபியின் மிகவும் பிரபலமான இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் ஷாருக்கானை வீழ்த்திய நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். ஷாருக்கானுக்கு இந்த பட்டியலில் 2-வது இடம் கிடைத்துள்ளளது.

Advertisment

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்-7-ந் தேதி வெளியான ஜவான் படம் வசூலில் புயலை கிளப்பி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தை இயக்கிய அட்லி என பலரும் இந்திய சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.

உலகின் முன்னணி ஆன்லைன் திரைப்பட தரவுத்தளமான ஐஎம்டிபி (IMDb) அதன் இணையதளத்திற்கு சுமார் 200 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் வாரம் முழுவதும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வாராந்திர பிரபலமான இந்திய பிரபலங்களின் பட்டியலைத் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஐஎம்டிபியின் (IMDb) இந்த வாரத்தின் மிகவும் பிரபலமான இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் நயன்தாரா முதலிடம் பிடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் நர்மதா ராய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவன், நயன்தாராவின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஐஎம்டிபி (IMDb) இன் பதிவை வெளியிட்டு உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் தங்கமே," என்று பதிவிட்டுள்ளார்.

அறிமுக நடிகர்கள் முதல் வழக்கமான ராக்ஸ்டார்கள் வரை, நமது பிரபலமான இந்திய பிரபலங்கள் அம்சம் அனைத்தையும் பெற்றுள்ளது உங்களுக்கு பிடித்தவைகளை நீங்கள் கண்டறிகிறீர்களா?" என ஐஎம்டிபி (IMDb) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் 2-வது இடம் பிடித்துள்ளார். ஜவான் இயக்குனர் அட்லீ இந்த பட்டியலில் 3-வது பிரபலமான இந்திய பிரபலமாக இடம் பிடித்துள்ளார்.

பிரபலமான இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் 4-வது இடத்தை ஜவான் நடிகர் நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார். ஏற்கனவே இந்திய ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கின் அணியில் இருந்த சஞ்சீதா பட்டாச்சார்யா, சன்யா மல்ஹோத்ரா மற்றும் லெஹர் கான் ஆகியோரும் ஐஎம்டிபியின் பட்டியலில் முறையே 23, 24 மற்றும் 27வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஐஎம்டிபியின் பட்டியலில் இடம்பிடித்த மற்ற குறிப்பிடத்தக்க பிரபலங்கள் ககன் தேவ் ரியார். ஹன்சல் மேத்தாவின் ஸ்கேம் 2003 இல் அப்துல் கரீம் தெல்கியாக நடித்த இவர், இந்த பட்டியலில்  14 வது இடத்தையும், சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் ரோம்காம் படத்தின் பாபில் கான் 21 வது இடத்திலும் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: