Advertisment
Presenting Partner
Desktop GIF

திருமணத்திற்கு தயாரான தீரன் நடிகை... மாப்பிள்ளை யார்? திருமணம் எங்கே?

அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Rakul Preeth Singh

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பாக்னானியை வரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

தமிழில் வெளியான 7ஜி ரெய்ன்போ காலணி படத்தின் ரீமேக்காக கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து, யுவன் என்ற டப்பிங் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அவர், அடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து புத்தகம், என்னமோ ஏதோ, ஆகிய படங்களில் நடித்த அவருக்கு வெற்றி கிடைக்காத நிலையில், தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த ரகுல், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்து கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே, பூ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு முதல், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங்கில் இருக்கும் ரகுல் தற்போது அவரை பிப்ரவரி 2024 இல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தாய்லாந்தில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை நண்பர்களுடன் கொண்டாடிய இருவரும், தங்களது திருமணம் தொடர்பாக முடிவு செய்து வருகின்றனர்.  பெரும்பாலும், இருவரும் ஒரு நெருக்கமான கடற்கரை பகுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரகுலுக்கும் ஜாக்கிக்கும் பிப்ரவரி 22-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜாக்கி பாக்னானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறய ரகுல், இந்த நாள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் பெற விரும்புகிறேன். உங்கள் கருணை, அப்பாவித்தனம் கிடைப்பது அரிது, உங்கள் நகைச்சுவைகள் மிகவும் வேடிக்கையானவை, ஆனால் அவை வேடிக்கையானவை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எப்போதும் உங்களுடன் இருப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rakul Preet Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment