அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் ஒரு காட்சிக்காக ரன்பீர் கபூருடன் லிப் லாக் காட்சியில் நடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி குறுகிற காலத்தில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா தமிழில், சுல்தான் மற்றும் விஜயின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இந்த படத்தில், அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் டிசம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே இந்த படத்தின் ஹுவா மெயின் என்ற பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்காக ஒரு போஸ்ட்டை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் கீதமான ஹுவா மெயின், காதல் மற்றும் உணர்ச்சி உலகில் மூழ்க தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ராகவ் சைதன்யா ப்ரீதம் ஆகியோர் பாடியுள்ள இந்த ஆத்மார்த்தமான மெலடி பாடலை மனோஜ் முன்டாஷிர் எழுதியுள்ளார். மேஸ்ட்ரோ ப்ரீதம் இசையமைத்துள்ளார். ப்ரீதம் மற்றும் ரன்பீர் கபூர், ஆகிய இருவரும் இணைந்து பல பாடல்களை ஹிட் கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது, ஹுவா மெயின் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால் பாடல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காதல் பாடலானது மிகவும் அழகான மெல்லிசையை மட்டுமல்ல, படத்தின் முன்னணி ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ரியும் நன்றாக உள்ளது. அதனை உணர்த்தும் விதமாக இருவரும் லிப் டூ லிப் கொடுக்கும் முத்த காட்சி போஸ்டரை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“