scorecardresearch

தளபதி விஜய்யுடன் ரொமாண்டிக் ரோலில் நடிக்க ஆசை’ மனம் திறந்த டாப் ஹீரோயின்

Tamil Cinema Update : மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்த மாளவிகா, தமிழில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் அறிமுகமானார்.

தளபதி விஜய்யுடன் ரொமாண்டிக் ரோலில் நடிக்க ஆசை’ மனம் திறந்த டாப் ஹீரோயின்

Tamil Cinema Update : தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாக பட்டம் போலே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து நிமயக்கம் என்ற மலையாளப்படத்திலும், நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னடப்படத்திலும் நடித்தார்.

ஹிந்தியின் இவர் அறிமுகமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்” என்ற படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதன்பிறகு மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்த மாளவிகா, தமிழில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான இவர் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் மாஸ்டர் படத்திற்கு தன இடம் உண்டு. தற்போது தனுஷூடன் மாறன், மற்றும் யாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மாளவிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவதையும் மாளவிகா தொடர்ந்து வருகிறார். அதுபோல் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் உரையாடுகையில் அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர்கள மீண்டும் ஒரு முறை விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த மாதிரியாக படத்தில் நடிக்க விரும்புகிறீகள் என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், விஜய் சில ஆண்டடுகளாக காதல் கதையில் நடிக்கவில்லை” அவரை மீண்டும் ஒரு காதல் படத்தில் பார்க்க, அவருடன் காதல்  படத்தில் நடிக்க விரும்புகிறேன்! என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு ரசிகர் மாறன் படத்தின் தனுஷூடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டபோது, ​​”நடிப்பில் மாஸ்டர் கிளாஸ் வாங்கியது போல் இருந்தது! அவருடன் பணியாற்றுவது அற்புதமான நிகழ்வு!” தனுஷ் ஒரு வழிகாட்டி என்று கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான பாடல்களில் எந்த பாடல் உங்களுக்கு பிடித்துள்ளது என்ற கேள்விக்கு, ‘புஷ்பா’ படத்தில் வரும் ‘ஸ்ரீவள்ளி’ பாடல், சமீப காலங்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும், சித் ஸ்ரீராமின் குரல் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு ரசிகர் அல்லு அர்ஜுனைப் பற்றி கேட்டபோது, ​​”மாஸ்” என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.

இந்த கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பான ட்விட்டர் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: South indian young actress malavika mohanan her wish again act with vijay