இந்தியாவில் இன்றைய 2கே கிட்ஸ் ரசிகர்கள் இந்திய சினிமாவை கடந்து உலக சினிமாக்களை அதிகம் பார்க்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக சினிமாவை தாண்டி, மியூசிக் ஆல்பம், வெப் சீரிஸ் என பல நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றனர். இதில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவது தென்கொரிய இசை நிகழ்ச்சிகள் என்று சொல்லலாம்.
தென்கொரிய வெப் சீரிஸ், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபலமான ஒரு தென்கொரிய இசைக்குழு தான் பி.டி.எஸ்.(BTS) 7 பேர் கொண்ட இந்த இசைக்குழு, யூடியூப் சேனல்களில் இசை ஆல்பம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் நிலையில், இதில் இருக்கும் 7 பேருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் தற்போது சுகா என்பவர் சிக்கலில் சிக்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகா தென்கொரியாவின் பிரபல நகராமான ஹென்னம் டாங்கில் உள்ள ஒரு தெருவில் விழுந்து கிடந்துள்ளார். இவரை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவருக்கு உதவு முயன்றபோது சுகா மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் மது அருந்தியதற்கான சோதனை மேற்கொண்டபோது, அவரது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக மது கலந்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சுகா மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனக்கு கால் வலி இருப்பதாகவும், கிக்போர்டு உள்ள ஸ்கூட்டரை ஓட்டுவதற்காக ஒரு பீர் மட்டுமே தான் குடித்தாகவும் கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில், அவர் வைத்திருந்த வாகனம், கிக்போர்டு ஸ்கூட்டர் அல்ல என்பதும் அது எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் என்பதும் தெரியவந்ததால், இந்த வழக்கு மேலும் தீவரமானது.
தென்கொரியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டினால், ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 3 முதல் 800 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 12 லட்சத்திற்கு மேல்) அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டம். இதனிடையே சுகாவின் இந்த செயலுக்கு பி.டி.எஸ். பிரதான நிறுவனமான பிக்ஹிட் மியூசிக் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் அதிகரித்துள்ளது, மேலும் அவரை பி.டி.எஸ்.குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Here's the real SUGA's CCTV footage was revealed by TV Chosun.. He was going on the side of the road, wearing helmet and the speed of the electric scooter was a normal as a human being could walk..
— BTS Updates, News & Charts ⁷ (@_BTSMoments_) August 14, 2024
Because of such a peak thing, he has received so much hate for no reason..… pic.twitter.com/E1SyJv5N6e
அதே சமயம் இந்த வழக்கை போலீசார் தவறாக கையாண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ள நிலையில், சுகாவின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.