பாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்

பாடகர் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளதோடு, அவர் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.

sp balasubrahmanyam, sp balasubrahmanyam movies, எஸ்பிபி நடித்த திரைப்படங்கள், எஸ்பிபி நடித்த படங்கள், கேளடி கண்மணி, காதலன், sp balasubrahmanyam films, actor sp balasubrahmanyam, sp balasubrahmanyam death, sp balasubrahmanyam dead, spb, spb movies, spb films, actor spb, spb demise, spb condolence

ரசிகர்களால் எஸ்.பி.பி என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேதை இன்று காலமானார். அவர் எல்லா வயது ரசிகர்களாலும் மதிக்கப்படுவதற்கு, அவர் இசையில் முறையான கல்வியைப் பெறாமல் இசை உலகில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கினார் என்பது ஒரு காரணம். அவர் விருது பெற்ற பின்னணி பாடகராகி 6 தசாப்தங்களுக்குப் பிறகும் அவரால் ஒரு இசைக் குறிப்பை எழுத முடியாது என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும், அவரது பாடும் வலிமைக்கு நிகர் எதுவும் இல்லை. அவர் ஒரு இயற்கையான மேதை ஆவார்.

தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பாடியதைத் தவிர (எஸ்.பி.பி 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளது ஒரு சாதனை.) அவர் குறிப்பிடத்தக்க சில படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.

ஒரு நடிகராக எஸ்பிபி செய்த விஷயங்களை பல பின்னணி பாடகர்களால் செய்ய முடியவில்லை. அவர் பார்வையாளர்களிடமிருந்து நிறைய அன்பைப் பெற்றார். மேலும், ஒரு குணச்சித்திர நடிகராக அவர் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

பாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த படங்களின் பட்டியல் இங்கே:

கேளடி கண்மணி (1990): கே.பாலசந்தரிடம் நீண்டகால உதவியாளராக இருந்த இயக்குனர் வசந்த், தனது முதல் திரைப்படத்தை தன்னை வைத்து இயக்க வேண்டாம் என்று அவரிடம் அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், படம் தோல்வியடைந்தால், அவர் இழக்க ஒன்றுமில்லை. ஆனால், இளம் இயக்குனர் தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே காணாமல் போவார் என்று எஸ்.பி.பி வசந்த்திடம் கூறினார். ஆனால், வசந்த் உறுதியாக பாடும் நிலா எஸ்பிபி-யைத் தனது படத்தில் நடிக்க தூண்டினார். எஸ்பிபி-யின் கவலைகளுக்கு மாறாக, இந்த படம் தமிழக திரையரங்குகளில் 285 நாட்கள் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில், எஸ்பிபி மனைவியை இழந்தவர் என்ற கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான பாடும் திறமையாளராக நடித்தார். அவரது டீனேஜ் மகள், அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கான அவரது யோசனையை ஒப்புக் கொள்ளாததையொட்டி அந்த படத்தின் கதை அமைந்திருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பால், இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில், மூச்சுவிடாமல் பாடப்பட்டுள்ள “மன்னில் இந்த காதல்” என்ற பாடலில் எஸ்.பி.பியை அவரது நடிப்பையும் பாடலையும் தனியாகப் பிரித்து பார்ப்பது என்பது கடினம்.

திருடா திருடா (1993): சிபிஐ அதிகாரி லட்சுமி நாராயணனாக எஸ்பிபி-யின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. அவர் சினிமாவில் சிரமமில்லாமல் நடிப்பார். அவருடைய இயல்பான நகைச்சுவை மணிரத்னத்தின் தீவிர நகைச்சுவைக்கு வலு சேர்க்க உதவியது. இந்த படம் ஒரு நடிகராக எஸ்பிபி-யின் சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டான ஒன்றாகும்.

காதலன் (1994): இந்த படம் எஸ்.பி.பி-யின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று சொன்னால் அது தவறில்லை. இந்த படத்திற்குப் பிறகு, அவர் ஹீரோவின் தந்தையாக நடிக்கும் நடிகராக ஆனார். ஷங்கர் இயக்கிய இந்த காதல் பாடத்தில், எஸ்.பி.பி ஒரு எளிமையான போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் நண்பனைப் போன்ற ஒரு அன்பான தந்தையின் பாத்திரத்தில் நடித்தார். அவர் தனது மகனை குடித்துவிட்டு தனது மகனின் காதல் தோல்வியை ஆறுதல் படுத்துவார். 1990களின் முற்பகுதியில் அந்த கதாபாத்திரம் ஒரு சிறந்த தந்தைக்கான அளவுகோலாக இருந்தது.

உல்லாசம் (1996): இந்தப் படத்தில் எஸ்பிபி மீண்டும் ஒரு அண்பான தந்தையாக நடித்தார். ஆனால், ஒரு சிறிய மாறுபாட்டுடன். அவர் கான்ஸ்டபிள் கதிரேசனைப் போல அன்பாகவும் அழகாகவும் இல்லாமல், இதில் அவர் ஒரு என்றென்றும் ஏமாற்றமடைந்த தந்தையாக நடித்தார். அவர் தனது கட்டுக்கடங்காத மகனின் நிச்சயமற்ற எதிர்காலத்தில் தூக்கத்தை இழந்தவராக நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sp balasubrahmanyam acted films list as a good actor

Next Story
‘பாலு எங்க போன? உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜாspb demise, spb death, ilayaraja condolence to spb demise, எஸ்பிபி, எஸ்பி பாலசுப்ரமணியம், இளையராஜா, இளையராஜா வீடியோ, ilayaraja video, ilayara sadness video, ilayaraja, sp balasubrahmanyam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com