கேளடி கண்மணி படப் பாடலை மூச்சுவிடாமல் பாடினாரா எஸ்பிபி? வைரல் வீடியோ

மறைந்த பாடகர் எஸ்.பி.பி கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று ஒரு நிகழ்ச்சியின் வீடியோவில் கூறியுள்ளார். ஆனால், வேறு ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடியதாக தெரிவித்துள்ளார்.

spb, sp balasubramanyam, keladi kanmani movie, mannil intha kathalanri song, ilaiyaraja,

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று ஒரு நிகழ்ச்சியின் வீடியோவில் கூறியுள்ளார். ஆனால், வேறு ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடியதாக தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த செப்டம்பர் 25ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு இந்திய சினிமா உலகத்தினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவருடைய மறைவால் துயரத்தில் ஆழ்ந்த சினிமாத் துறையினர், மேடைப் பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அவர் இறப்பதற்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்ற வீடியோக்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்களுடைய துயரத்தையும் எஸ்.பி.பி-யின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

சுமார் 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் வெற்றிகரமான பாடகராக ஜொலித்த எஸ்.பி.பி 16 மொழிகளில் 42,000க்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். அவருடைய புகழ்பெற்ற பாடல்களை பட்டியலிட்டால், நிச்சயமாக அவர் கதாநாயகனாக நடித்த கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருப்பார் என்பதே அந்த பாடலின் சிறப்பு. அதே போல, அவர் நடிகர் அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமைக் கேட்டேன் என்ற பாடலையும் மூச்சு விடாமல் பாடியிருப்பார்.

இந்த நிலையில், எஸ்.பி.பி-யின் மறைவுக்குப் பிறகு, அவருடைய பல வீடியோக்கள் ரசிகர்கள் பகிர்ந்துகொண்டதில், ஒரு நிகழ்ச்சி வீடியோவில், பாடகர் எஸ்.பி.பி தான் கேளடி கண்மணி படத்தின் மண்ணில் இந்த காதலன்றி பாடலை மூச்சு விடாமல் பாடவில்லை. ஆனால், அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமைக் கேட்டேன் என்ற பாடலை மூச்சு விடாமல் பாடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

மறைந்த பாட்கார் எஸ்.பி.பி இறப்பதற்கு முன்பு, கேளடி கண்மணி படம் வெளியாகி 25வது ஆண்டு விழா நிகழ்ச்சியில், தான் மண்ணில் இந்த காதலன்றி பாடலை மூச்சு விடாமல் பாடவில்லை என்று கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sp balasubrahmanyam kealadi kanmani movie mannil intha kathal song video

Next Story
“மாஸ்க்கே முகமாக போட்டுட்டு இருக்கிறவங்க நெறைய பேர்” பிக் பாஸ் ப்ரோமோBigg Boss Tamil 4 promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com