திரையிசைப் பாடல்கள் பலருக்கும் மன அமைதியைக் கொடுக்கும் பாடல்களாக உள்ளன. பழைய திரையிசைப் பாடல்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல மதிப்பு கூடும் ஒயினைப் போல இருக்கின்றன. ஒவ்வொரு திரையிசைப் பாடலுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும். அந்த வகையில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1970-ம் ஆண்டு வெளியான நவக்கிரகம் படத்தில் வந்த ஒரு பாடலைப் பற்றியதுதான் இந்த தகவல். இந்த படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.
நவகிரகம் படத்தில் பொட்டு வைத்த முகமோ என்ற பாடலை சிவாஜி கணேசன் பாடுவார். இந்த படத்தில்தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிவாஜிக்காக பாடிய முதல் பாடல் என்கிறார் இசையமைப்பாளர் அமுதபாரதி.
இசையமைப்பாளர் வி. குமார் தான் இசையமைக்கும் பாடல்களில் ஒருவர் பாடும்போது, மற்றொவரை ஹம்மிங் மட்டுமே பாட வைப்பார். அந்த வகையில், நவகிரகம் படத்தில், “உன்னைத் தொட்டு வந்த காற்று என்னைத் தொட்டது” என்ற பாடலை வி. குமார் இசையமைத்திருப்பார். இந்த பாடலை பி. சுசீலா பாடியுள்ளார்.
இந்த பாடலை பி. சுசீலா பாடும்போது, எஸ்.பி.பி ஹம்மிங்கில் பாடியிருப்பார். பாடல் வரிகளே இல்லை என்றாலும் எஸ்.பி.பி ஹம்மிங்கிலேயே பிரமாதமாக செய்திருப்பார். எஸ்.பி.பி அப்போது பிரபலமான இளம் பாடகர் என்றாலும், ஈகோ பார்க்காமல் தனது இளமையான குரலில் ஹம்மிங்கிலேயே ரசிகர்களை ஈர்த்து ஸ்கோர் செய்திருப்பார்.
அதே போல, இசையமைப்பாளர் அமுதபாரதி, எஸ்.பி.பி-க்கும் இசையமைப்பாளர் வி. குமாருக்கும் இடையே உள்ள நெருக்கத்தைக் குறிப்பிடுகிறார். எஸ்.பி.பி-க்கு குழந்தை பிறந்திருந்தபோது, இசையமைப்பாளர் வி.குமார் தனது காரைக் கொடுத்து பார்த்துவிட்டு வர அனுப்பி வைத்தாராம். அதே போல, இசையமைப்பாளர் வி. குமார் மறைந்தபோது ஆந்திராவில் எங்கேயோ இருந்தாலும் எஸ்.பி.பி விமானத்தில் இருந்து வந்து அஞ்சலி செலுத்தியதை அமுதபாரதி நினைவுகூர்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“