/indian-express-tamil/media/media_files/2025/09/06/sp-charan-complaint-to-chennai-police-about-assistant-director-rent-arrears-foul-speech-tamil-news-2025-09-06-11-42-36.jpg)
வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குனர் மீது பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளார்.
மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி. சரண் ரியாலிட்டி உள்ளிட்ட டி.வி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். இந்நிலையில், வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குனர் மீது பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள குடியிருப்பை உதவி இயக்குநர் திருஞானம் என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். இதையடுத்து, உதவி இயக்குநர் திருஞானம் 23 மாதங்களுக்கான வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இது பற்றி கேட்ட எஸ்.பி.சரணை மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி. சரண் அந்த உதவி இயக்குநர் திருஞானம் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆபாசமாக பேசி மிரட்டியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பாடகர் எஸ்.பி. சரண் உதவி இயக்குநர் ஒருவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.