/indian-express-tamil/media/media_files/2025/07/11/spb-and-janaki-2025-07-11-12-18-59.jpg)
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி ஆகிய இருவரும் இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த பாடகர்களில் முக்கியமானவர்கள். தங்களின் தனித்துவமான குரல் வளத்தாலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். திரைப்படப் பாடல்களில் அவர்களின் கூட்டுப் பயணமும், தொழில்முறை உறவும் மிகவும் மரியாதைக்குரியதாகவும், பரஸ்பர பாராட்டிற்குரியதாகவும் அமைந்திருந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் மேடையில் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்ட வீடியோ ஒன்று பியர்ல் வெல்த் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜானகி அம்ம எஸ்.பி.பி.யின் பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் ஒலிப்பதிவின்போது தான் உடனிருந்து அதைக் கேட்டு ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது அவர்களின் தொழில்முறை உறவுக்கு அப்பாற்பட்டு, ஒருவருக்கொருவர் இருந்த ஆழ்ந்த மரியாதை மற்றும் கலை ரசனையை எடுத்துக்காட்டுகிறது. எஸ்.பி.பி மற்றும் ஜானகி இருவரும் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளனர்.
அதில் அவர் குறிப்பிட்ட பாடல், 1982-ல் வெளிவந்த 'நினைவெல்லாம் நித்யா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பனிவிழும் மலர்வனம்' ஆகும். இப்பாடலுக்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. ஜானகி அவர்கள் இந்த வீடியோவில் இப்பாடலின் சில வரிகளை எஸ்.பி.பி - யின் குரலிலேயே பாடியுள்ளார். மேலும் நான் பாடுவது சரியா என்று பாடுங்கள் என்றும் அவர் எஸ்.பி.பி- யிடம் கூறியுள்ளார்.
"பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒருவரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும்" இந்த பாடலைதான் ஜானகி அம்மா எஸ்.பி.பி - யின் குரலில் பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ்.பி.பி.யின் இனிமையான குரல், வைரமுத்துவின் அழகான வரிகள் மற்றும் இளையராஜாவின் மனதை வருடும் இசை என அனைத்தும் சேர்ந்து இந்தப் பாடலை ஒரு காதல் கீதமாக மாற்றியது. இந்தப் பாடல் வெளியான காலத்தில் மட்டுமல்ல, இன்றும் பலரின் விருப்பப் பாடலாக இருக்கிறது.
தென்னிந்திய திரைப்பட இசையில் பின்னணிப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோரின் பங்களிப்பு தனித்துவமானது. பல தசாப்தங்களாகத் தடையின்றித் தொடர்ந்த இவர்களின் நட்பு மற்றும் தொழில்முறை உறவு, எண்ணற்ற இனிமையான பாடல்களை உருவாக்கியது. அவர்களின் குரல்களுக்கு இடையே இருந்த அசாத்தியமான பொருத்தம், கேட்போர் மனதைக் கவரும் வகையிலான பாடல்களைப் பாட அவர்களுக்கு உதவியது. ஒருவரையொருவர் மதித்து, அவர்களின் திறமையை முழுமையாகப் புரிந்துகொண்டதன் காரணமாகவே, இவர்களது பாடல்கள் யாவும் இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.