Advertisment

Tamil News Highlights: தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற முதலவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின்

பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil News Updates: தமிழ் திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40,000 பாடல்களுக்கும் மேலான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் வாழ்வோடு கலந்திருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசைஞானி இளையராஜா இசையில், இவர் பாடிய பாடல்கள் அனைத்தும், பாலை வனத்தில் கண்டெடுத்த தேனூற்று போல அத்தனை இனிமையானது. சுகம், துக்கம், மகிழ்ச்சி, தோல்வி, வலி, வேதனை என சாமனிய மனிதனின் குரலாய் வெளியில் ஒலித்தவர். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார்.

Advertisment

குரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்

‘பாலு எங்க போன? உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா

இதனையடுத்து நேற்று முன் தினம் மீண்டும் எஸ்.பி.பி-யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பிணும், சிகிச்சை பலனின்றி நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் பெருஞ்சோகத்தில் ஆழ்ந்தனர். பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

SP Balasubrahmanyam Death , SPB News Tamil, SPB Death News : பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    22:07 (IST)26 Sep 2020

    உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

    20:29 (IST)26 Sep 2020

    ஸ்டாலின் ( 7/n)

    தமிழக முதலமைச்சர்கள் வரலாற்றில்; நெஞ்சை நிமிர்த்தி, தட்டிக் கேட்க வேண்டிய உரிமைகள் உள்ள காரியங்களில் கூட, அதை ஏனோ தவிர்த்துவிட்டு, “முதுகெலும்பு இல்லாமல் இப்படியும் ஒரு முதலமைச்சர், நெளிந்து வளைந்து கொண்டு இருந்தார்” என்று நாளைய தலைமுறை இழித்துப் பழித்துப் பேசும் அளவிற்கு, திரு. பழனிசாமி நடந்து கொள்ளாமல், இப்போதாவது உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். இது மத்திய பா.ஜ.க. அரசுக்குச் செய்யும் சலுகை அல்ல; மாநிலத்தின் நலனுக்காக நிலை நாட்ட வேண்டிய உரிமை!

    20:29 (IST)26 Sep 2020

    ஸ்டாலின் ( 6/n)

    மத்திய அரசு எடுத்துச் செலவு செய்த “ஜி.எஸ்.டி ஈடு செய்யும் நிதியில்” தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் இருக்கிறது. 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் 4321 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருக்கிறது. ஆனால் இந்த சி.ஏ.ஜி அறிக்கை குறித்து இன்றுவரை முதலமைச்சர் திரு. பழனிசாமி திருவாய் மலர்ந்து கருத்து ஏதும் கூறவும் இல்லை; மாநில நிதியை எடுத்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கம் போல நிதியமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுத முன்வரவில்லை.

    “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்” என்று அடிக்கடி டெல்லி சென்று வருபவரும், அ.தி.மு.க.வின் “சூப்பர் ஸ்போக்ஸ்மேனும்” ஆன அமைச்சர் திரு. ஜெயக்குமாரும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

    தங்களின் ஊழல் வழக்குகளில் - வருமான வரித்துறை, சி.பி.ஐ. வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு விழிக்கும் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற படபடப்புடன் முதலமைச்சர் திரு. பழனிசாமி, மாநிலத்தின் உரிமைகளை இப்படி அடமானம் வைப்பது, அவர் வகிக்கும் பதவிக்குச் சற்றும் பொருத்தமானதல்ல!

    20:28 (IST)26 Sep 2020

    தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற முதலவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின் ( 5/n)

    மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் “இறையாண்மை மிக்க உத்தரவாதம்” போன்ற ஒரு வாக்குறுதியை; ஏதோ போகிற போக்கில் பேச்சு வாக்கில் சொல்லப்பட்டதைப் போலச் சாதாரணமாக நினைத்து, அதைப் புறக்கணித்து, அலட்சிய மனப்பான்மையுடன், அனைவரையும் எள்ளி நகையாடி இருக்கிறது.

    கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மாநில நிதி உரிமையைப் பறிக்கும் இதை விட ஒரு மோசமான ஒரு செயலை - நிதி விதி மீறலை - இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசாவது செய்திருக்குமா? என்றால், இருப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை!

    “குதிரை குப்புறத் தள்ளியதுமில்லாமல், குழியும் பறித்து விட்டது” என்பது போல்; மாநிலங்களுக்காக வசூல் செய்த பணத்தையே, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தி விட்டு; “இந்தியத் தொகுதி நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை” என்று நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் திருமதி. நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனைக்குரியது; வெட்கக் கேடானது.

    20:28 (IST)26 Sep 2020

    தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற முதலவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின் ( 4/n)

    அதுமட்டுமின்றி, அந்த நிதியை, வேறு செலவுகளுக்கும் பயன்படுத்தியுள்ளது.

    2017-18-ஆம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட 62,612 கோடி ரூபாயில் 6,466 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தன்னிடமே வைத்துக் கொண்டது. 2018-19-ல் வசூல் செய்த 95081 ஆயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரத்து 806 கோடி ரூபாயை தன்னிடமே வைத்துக் கொண்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வசூலையும் சேர்த்தால் வரும் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை மத்திய அரசே பயன்படுத்திக் கொண்டு விட்டது.

    மத்திய அரசின் “இந்தியத் தொகு நிதியிலிருந்து” மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இந்தத் தொகையை, “ஜி.எஸ்.டி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நிதியத்திற்கு” அனுப்பி, அங்கிருந்து மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய மனமின்றி, மாநிலங்களை வஞ்சித்திடும் வகையில்,கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசே அப்பட்டமாக மீறியிருக்கிறது. அரசியல் சட்ட உத்தரவாதத்தையே காற்றில் பறக்கவிட்டுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

    20:27 (IST)26 Sep 2020

    தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற முதலவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின் ( 3/n)

    ஆனால் அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, “இழப்பு ஈடு செய்யப்படும் என்று அரசியல் சட்ட உத்தரவாதம் பெற்று இருக்கிறோம்” என்று பெருமை (!) பேசி, பீற்றிக் கொண்டது. அதையொட்டி, தமிழகச் சட்டமன்றத்திலும் ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றியது.

    ஜி.எஸ்.டி. சட்டம் செயல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய வசூல் செய்யப்பட்ட “ஜி.எஸ்.டி இழப்பீடு வரி”-யை (GST Compensation Cess), அதற்கென உருவாக்கப்பட்ட “வருவாய் இழப்பினை ஈடு செய்யும் நிதியத்திற்கு” (GST Compensation Fund) அனுப்பாமல்; மத்திய அரசின் தொகுப்பு நிதியிலேயே (Consolidated Fund of India) வைத்துக் கொண்டு விட்டது மத்திய பா.ஜ.க. அரசு.

    20:27 (IST)26 Sep 2020

    தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற முதலவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின் (2/n)

    நள்ளிரவில் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பு குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, “அந்த இழப்பு ஈடுசெய்யப்படும்” என்று மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதியளித்து, அது 101-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திலும், சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடு செய்தல்) சட்டம் 2017-லும் தெளிவாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு அளித்த வாக்குறுதி, ஓர் 'இறையாண்மை மிக்க உத்தரவாதம்” (Sovereign guarantee) என்று நம்பியே மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை, தங்களது சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிச் செயல்படுத்தின. தமிழகச் சட்டமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் உள்ள பாதகமான அம்சங்களை எடுத்துச் சொல்லி; “ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம். இதைத் தேர்வுக் குழுவிற்கு அனுப்புங்கள்” என்று கோரிக்கை வைத்தேன்.

    20:26 (IST)26 Sep 2020

    தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற  முதலவர்  நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஸ்டாலின் (1/n )

    GST-யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வேண்டிய நிதியை வேறு செலவுகளுக்கு பயன்படுத்துவது இறையாண்மையை மீறும் செயல்; தமிழகத்திற்கான GST இழப்பீட்டுத்தொகையை பெற

     முதலவர்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.  

    இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,   

    “சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது” என்று தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் (சி.ஏ.ஜி) அறிக்கை சுட்டிக்காட்டிய பிறகும், தமிழ்நாட்டிற்கு இதுதொடர்பாக இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அடங்கி அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    19:48 (IST)26 Sep 2020

    ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாக தான் நாங்கள் பார்க்கிறோம் - பிரதமர் நரேந்திர மோடி

    ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாக தான் நாங்கள் பார்க்கிறோம். இது எங்கள் கலாச்சாரத்தின், குணத்தின், சிந்தனையின் ஒரு அங்கமாகும். உலகத்தின் நலனுக்கு ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியா என்றுமே முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி 75-வது வருடாந்திரக் கூட்டத்தில்  தெரிவித்தார்.  

    19:28 (IST)26 Sep 2020

    திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா

    மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா. 

    19:07 (IST)26 Sep 2020

    75-வது வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரை

    ஐ நா பொதுச்சபையின் 75-வது வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி சற்று முன் உரையாற்றினார்.

    கொரோனா நோய்த் தொற்று காலத்தில் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களையும், மருத்துவ சாதனங்களையும் அளித்து உதவி இருக்கிறது .

    19:04 (IST)26 Sep 2020

    நம்மை நோக்கி வரும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது - ஸ்டாலின்

    எண்திசையிலிருந்தும் இணையம் வழியாக நம்மை நோக்கி வரும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.   

    19:02 (IST)26 Sep 2020

    மாவட்ட வாரியாக கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம்

    18:21 (IST)26 Sep 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தோற்றால் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்தனர்.  

    18:01 (IST)26 Sep 2020

    தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் - ஹெச். ராஜா

    தேசிய தலைவர் திரு.J.P.நட்டா ஜி தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.  

    16:36 (IST)26 Sep 2020

    தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்!

    பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம். அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் ஹெச் ராஜா உள்ளிட்ட எந்த ஒரு தமிழக நிர்வாகியின் பெயரும் இடம் பெறவில்லை

    14:42 (IST)26 Sep 2020

    நயன்தாரா அறிக்கை!

    நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது - பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை

    14:41 (IST)26 Sep 2020

    சோனியா காந்தி!

    கானக்குயில் கந்தர்வன்' எஸ்.பி.பி மறைவுக்கு பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எஸ்.பி பாலசுப்பிரமணியம் இந்தியாவின் வளமான இசை மற்றும் மொழியியல் கலாசாரத்தின் பிரகாசமான அடையாளம் என்றும் அவர் உண்மையிலேயே பாடும் நிலா - பாடும் சந்திரன் என்றும் தெரிவித்துள்ளார். நம் நாட்டின் மீது சங்கீத பிரகாசத்தை வெளிப்படுத்தியவர் எஸ்.பி.பி. என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    12:45 (IST)26 Sep 2020

    காவல்துறையினர் மரியாதை

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். 

    12:38 (IST)26 Sep 2020

    72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்

    தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    12:27 (IST)26 Sep 2020

    அஞ்சலி செலுத்திய விஜய்

    12:25 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி உருவப்படத்திற்கு ராதிகா, விஜய்சேதுபதி அஞ்சாலி

    ஜெய்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் ராதிகா, டாப்ஸி மற்றும் படக்குழுவினர் பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்..

    12:13 (IST)26 Sep 2020

    அணிவகுப்பு மரியாதை

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு, காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. 

    12:07 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

    பாடகர் எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார். 

    11:49 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி-யின் இறுதிப் பயணம்

    போலீஸ் அணிவகுப்புடன் எஸ்.பி.பி-யின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

    11:42 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி-யின் இறுதி நிமிடம்

    மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இறுதிசடங்குகள் நடைபெற்று வருகின்றன

    11:16 (IST)26 Sep 2020

    ஆந்திர அமைச்சர் இறுதி அஞ்சலி

    திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் எஸ்பிபி இல்லத்தில், ஆந்திர மாநில அமைச்சர் அனில்குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினார். 

    10:56 (IST)26 Sep 2020

    இறுதிச் சடங்குகளை செய்யும் எஸ்.பி.பி சரண்

    தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி-யின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. இதனை எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண் செய்து வருகிறார். 

    10:40 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி மணல் சிற்பம்

    மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் ஒடிசா கடற்கரையில், எஸ்.பி.பி-யின் மணற் சிற்பத்தை உருவாக்கி, மரியாதை செய்தபோது....

    10:36 (IST)26 Sep 2020

    இறுதிச் சடங்கு தொடக்கம்

    திருவள்ளூர், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கினர்.

    10:05 (IST)26 Sep 2020

    நடிகர் விவேக் கவிதாஞ்சலி

    09:31 (IST)26 Sep 2020

    மனோ கண்ணீர் அஞ்சலி

    எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ கண்ணீர் விட்டு கதறி அழுதார்..!

    09:04 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி-க்கு நடிகர் செந்தில் புகழஞ்சலி

    இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க திகட்டாதவை என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். 

    08:42 (IST)26 Sep 2020

    ரசிகர்கள் இறுதி அஞ்சலி

    எஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தாமரைபாக்கத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் இன்று காலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    07:53 (IST)26 Sep 2020

    எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்

    பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது

    22:43 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் தாமரைப்பாக்கத்தில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

    பாடகர் எஸ்.பி.பி உடல் திருநின்றவூர் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் நாளை காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி எஸ்.பி.பி-யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். காவல்துறையினர் தாமரைப்பாக்கத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 கி.மீ.க்கு முன்னதாகவே காவல் துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். தாமரைப்பாக்கத்தில் பொதுமக்கள் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    22:25 (IST)25 Sep 2020

    வெற்றி, அன்பு, ஆன்மீகம், மகிழ்ச்சி ஆகியவற்றின் குரல் எஸ்.பி.பி - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி-யின் குரல் வெற்றி, அன்பு, ஆன்மீகம், மகிழ்ச்சி ஆகியவற்றின் குரல் என்று தெரிவித்துள்ளார்.

    21:18 (IST)25 Sep 2020

    தாமரைப்பாக்கத்தில் பொதுமக்கள் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை

    பாடகர் எஸ்.பி.பி உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கத்தில், பொதுமக்கள் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் தாமரைப் பாக்கத்தில் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த 1 மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    21:11 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி-யின் மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு - அன்புமணி ராமதாஸ்

    பாடகர் எஸ்.பி.பி மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு மிகவும் பிடித்த, புகழ்பெற்ற பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அனைவரின் மனங்களிலும் அவர் வாழ்வார்.” என்று தெரிவித்துள்ளார்.

    20:20 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    பாடகர் எஸ்.பி.பி-யின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

    20:13 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு பட்டை விளையாடும் சென்னை - டெல்லி வீரர்கள்

    பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுகிறார்கள்.

    19:58 (IST)25 Sep 2020

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல். அவரது பாடல்கள் பல மொழிகளில் லட்சக் கணக்கான இதயங்களைத் தொட்டுள்ளது. அவரது குரல் என்றும் வாழும்.” என்று தெரிவித்துள்ளார்.

    19:54 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி உடல் தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்படுகிறது

    பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் அவருடைய நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கம் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை. நாளை காலை 11 மணிக்கு அங்கே அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    19:01 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி உடலை தாமரைப்பாக்கம் தோட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு

    பாடகர் எஸ்.பி.பி உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுள்ளதால், அவருடைய உடல் அடக்கம் செய்ய, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள தோட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    18:58 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி-யின் குரல் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும் - மம்தா பானர்ஜி இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி-யின் குரல் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    18:48 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி மறைவால் இந்திய இசை ஒரு மெல்லிசை குரலை இழந்துவிட்டது - ஜனாதிபதி இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பி மறைவால் இந்திய இசை ஒரு மெல்லிசை குரலை இழந்துவிட்டது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “இசை மேதை எஸ்.பி.பி மறைவால் இந்திய இசை அதனுடைய ஒரு மெல்லிசைக் குரலை இழந்துவிட்டது. பாடும் நிலா என்று அழைக்கப்படும் எஸ்.பி.பி-க்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவர் பத்ம பூஷண் விருது மற்றும் எண்ணற்ற தேசிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

    " id="lbcontentbody">

    18:07 (IST)25 Sep 2020

    ‘பாலு எங்க போன? உலகம் சூனியமா போச்சு...’ இளையராஜா உருக்கம்

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு அவருடைய நீண்ட நாள் நண்பரும் இசையமைப்பாளருமானான இளையராஜா, தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “பாலு சீக்கிரம் எழுந்துவா... உன்னை பாக்க நா காத்திருகேன்னு சொன்னேன். கேட்கல நீ கேட்கல... போய்ட்ட... எங்க போன? கந்தர்வர்களுக்கு பாடுறதற்காக போய்விட்டாயா? இங்க உலக ஒரு சூனியாமா போச்சு... உலகத்தில ஒன்னும் எனக்கு தெரில. பேசறதுக்கு பேச்சு வரலை... சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை.” உருக்கமாக பேசியுள்ளார்.

    17:55 (IST)25 Sep 2020

    பாடும் நிலை பத்மபூஷண் எஸ்.பி.பி மறைவு வருத்தம் அளிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

    பாடும் நிலை பத்மபூஷண் எஸ்.பி.பி மறைவு வருத்தம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், “பாடும் நிலை பத்மபூஷண் எஸ்.பி.பி மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருடைய பாடல்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன. அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.

    17:42 (IST)25 Sep 2020

    இசை இழந்த மொழியாய் அழுகிறேன்: எஸ்.பி.பி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து இரங்கல் கவிதை பாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து, ஆயிரம் காதல் கவிதைகள், பாடிய உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய் அழுகிறேன் என்று இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    17:20 (IST)25 Sep 2020

    ஓய்வின்றி பாடிய குரல் ஓய்ந்து போனது: எஸ்.பி.பி மறைவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் ஓய்வின்றி பாடிய குரல் ஓய்ந்து போனது என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓய்வின்றி பாடிய குரல்

    ஓய்ந்து போனது

    மூச்சு விடாமல் பாடிய குழல்

    தன் மூச்சை விட்டது

    காற்றோடு எங்கும்

    அவர் கானங்களே

    நிறைந்திருக்கும்

    ஓய்வெடு பாடும் நிலாவே!” என்று தெரிவித்துள்ளார்.

    17:14 (IST)25 Sep 2020

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் புகழ் அஞ்சலி கவிதை

    பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு வருத்தம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் புகழ் அஞ்சலி கவிதை எழுதியுள்ளார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள இரங்கல் கவிதை, “இசைமொழிக்கு எழிலூட்டியவர்.

    தேன்மொழிக்கு

    சுவைகூட்டியவர்.

    அமுதமொழிக்கு

    அணிபூட்டியவர்.

    கவின்மொழிக்கு

    கலை யாத்தவர்.

    கனிமொழிக்கு

    சாறுஅளித்தவர்.

    கலைமொழிக்கு

    நயம்வார்த்தவர்.

    கன்னிமொழிக்கு

    கனிவைக் கோர்த்தவர்

    கானமொழிக்கு

    கனம் சேர்த்தவர்.

    மணிமொழிக்கு

    மகுடம் சூட்டியவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    17:10 (IST)25 Sep 2020

    மொழி, இனம், மதம், தேசம் கடந்த யாவருக்கும் பேரிழப்பு; எஸ்பிபி மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பி மறைவு மொழி,இனம், மதம்,தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீரவணக்கம்: பாடகர் எஸ்.பி.பி மீளவில்லை. மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல; மொழி,இனம், மதம்,தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    17:04 (IST)25 Sep 2020

    ‘இந்திய சினிமாவின் சாதனையாளரை இழந்து விட்டோம்’ எஸ்.பி.பி மறைவுக்கு அனில் கும்ப்ளே இரங்கல்

    ‘இந்திய சினிமாவின் சாதனையாளரை இழந்து விட்டோம்’ என்று எஸ்.பி.பி. மறைவுக்கு கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே இரங்கல் தெரிவித்துள்ளார்.

    16:39 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்!

    எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவு திரண்டுள்ளனர். கொரோனா தொற்று காலம் என்பதால், கட்டுப்பாடுகள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நாளை காலை எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது

    16:37 (IST)25 Sep 2020

    பொதுமக்களின் அஞ்சலிக்காக!

    எஸ்.பி.பி.யின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது

    16:37 (IST)25 Sep 2020

    முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்!

    எஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு .  எஸ்.பி.பி மறைந்தாலும், அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்  முதலமைச்சர் பழனிசாமி ட்வீட். 

    16:36 (IST)25 Sep 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்!

    எஸ்.பி.பி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்.  ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு  என பன்வாரிலால் புரோகித் பதிவு. 

    15:52 (IST)25 Sep 2020

    கனிமொழி இரங்கல்!

    பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது  என திமுக எம்பி கனிமொழி இரங்கல்

    15:49 (IST)25 Sep 2020

    சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்!

    எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது என ரஜினி இரங்கல். 

    14:57 (IST)25 Sep 2020

    பிரதமர் மோடி இரங்கல்!

    எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது .  எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் .  "பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது.  குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

    14:36 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி இறுதி அஞ்சலி!

    எஸ்.பி.பி. உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் . 

    14:34 (IST)25 Sep 2020

    டிடிவி தின்கரன் இரங்கல்!

    14:34 (IST)25 Sep 2020

    துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்!

    14:28 (IST)25 Sep 2020

    ஸ்டாலின் இரங்கல்!

    14:27 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி மருத்துவ அறிக்கை!

    மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாரடைப்பால் காலமானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:17 (IST)25 Sep 2020

    எஸ்.பி.பி மரணம்

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

    எஸ்.பி.பி-யின் மறைவையடுத்து, ஊடகங்களுடன் பேசிய அவரது மகன், எஸ்.பி. சரண், “மதியம் 1:04 மணிக்கு என் அப்பா இறுதி மூச்சு விட்டார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி. அவரது ரசிகர்கள் அவரை நினைவில் வைத்திருக்கும் வரை, எனது அப்பா நீண்ட காலம் வாழ்வார்” என்றார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவி சாவித்ரி, மகள் பல்லவி மற்றும் மகன் எஸ்.பி. சரணுடன் வசித்து வந்தார். அவரது இறுதி சடங்குகள் எஸ்.பி.பி-யின் தாமரைப்பாக்கம் இல்லத்தில் நடக்கிறது.
    Singer Sp Balasubramaniam S P Balasubrahmanyam
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment