எஸ்பிபி உடல்நிலை சீராக இருக்கிறது: மருத்துவ அறிக்கை

பலதுறை நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து விவரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

By: Updated: August 22, 2020, 07:16:42 AM

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளான அவரது உடல்நிலை, தொடர்ந்து மிகவும் மோசமாக இருந்து வந்தது. இதனால் சினிமா துறையினர் பலரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயக்குனர் பாரதிராஜா முன்னெடுத்த இந்த கூட்டுப் பிரார்தனையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.


இந்நிலையில் இன்று மாலை எஸ்பிபியின் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று பரவ நான் காரணமா? – முன்னணி பாடகி விளக்கம்

“கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் எஸ்பி பாலசுப்ரமணியம் தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை தற்போது stable ஆக இருக்கிறது. பலதுறை நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து விவரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

எஸ்பிபி பற்றி இன்று வெளியாகி இருக்கும் அறிக்கையில் Critical என குறிப்பிடப்படவில்லை. மாறாக, STABLE என்று குறிப்பிட்டிருப்பது ரசிகர்களை சற்று ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.

மேலும் நேற்று சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் செய்த கூட்டு பிரார்த்தனை வீண் போகவில்லை என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Spb latest health report condition stable

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X