40,000 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி.யே வியந்த ஒரு பாடல்: கார்த்திக் படத்தின் பாடல் ஆசிரியரை கட்டிப் பிடித்து பாராட்டு
Pacha mala poovu song- எஸ்பிபி குரலில்தான் இந்தப் பாடலை பதிவு செய்ய வேண்டும் என்று பல நாட்கள் காத்திருந்ததாக ஆர்.வி.உதயகுமார் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கிழக்கு வாசல்’. முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியோடு ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அதில் சாதியப் பின்னணியையும் திரைக்கதையாகக் கொண்ட படம்.
Advertisment
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதுக்கு எப்போதுமே மிகவும் நெருக்கமானவை. இந்தத் படத்தில் இடம்பெற்ற 'பச்சமலப் பூவு' பாடலை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் எழுதியிருப்பார்.
எஸ்பிபி குரலில்தான் இந்தப் பாடலை பதிவு செய்ய வேண்டும் என்று பல நாட்கள் காத்திருந்ததாக ஆர்.வி.உதயகுமார் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதற்கான காரணம் ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்போதும் உணர முடியும்.
Advertisment
Advertisements
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு, குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு… இந்த வரிகளை பாடி முடித்தப் பிறகு, வரும் புல்லாங்குழல் போதும்... பாடல் கேட்பவர்கள் மெய்,வாய், கண் எல்லாமே சொக்கிப்போகும்.
உங்களுக்கு இந்த பாடல் பிடிக்குமா? இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“