/tamil-ie/media/media_files/uploads/2019/05/Ilayaraja-and-SPB.jpg)
SPB with Ilaiyaraja: இசை உலகின் ராஜாவாக ரசிகர்களின் மனதில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் இசைஞானி இளையராஜா.
இவரது 75-வது பிறந்தநாள் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல கல்லூரி விழாக்களில் கலந்துக் கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார் ராஜா.
இந்நிலையில் அடுத்த மாதம் 2-ம் தேதி இவரது 76-வது பிறந்தநாள் வருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ‘இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல பாடகர்கள் கலந்துக் கொள்கிறார்கள். முக்கியமாக இசைஞானியின் நீண்ட நாள் நண்பரும், இரண்டு வருடங்களாக பிரிந்து இருப்பவர்களுமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இதில் கலந்துக் கொண்டு பாடுகிறார்.
பாடல்களுக்கான காப்புரிமை சம்பந்தமான பிரச்னையில் இளையராஜாவும் எஸ்.பி.பி-யும் இரண்டாண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். ‘
இந்நிகழ்ச்சிக்கான ஒத்திகை வரும் 22-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் எஸ்.பி.பி மட்டுமில்லாமல் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா, மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப் உள்ளிட்டோரும் கலந்துக் கொள்கிறார்கள்.
இதற்கான முன்பதிவு இணையத்தில் தொடங்கியிருக்கும் நிலையில், பாடகர்கள் பட்டியலில் எஸ்.பி.பி-யின் பெயர் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை வரவழைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.