கனா படக் குழுவின் ஸ்பெஷல் வீடியோ.. அர்ஜுன் நடிக்கும் புதிய படம்.. மேலும் செய்திகள்

சீன மொழியில் இந்தப் படத்துக்கு எப்படி ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார் இயக்குநர் அருண்ராஜா.

சீன மொழியில் இந்தப் படத்துக்கு எப்படி ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார் இயக்குநர் அருண்ராஜா.

author-image
WebDesk
New Update
கனா படக் குழுவின் ஸ்பெஷல் வீடியோ.. அர்ஜுன் நடிக்கும் புதிய படம்.. மேலும் செய்திகள்

கனா திரைப்படம் சீன மொழியில் இன்று வெளியாகிறது. இதையொட்டி படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சத்யராஜ், நடிகர் தர்ஷன், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இசை அமைப்பாளர் திபு நிணன் தாமஸ் உள்ளிட்டோர் பேசியிருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்தப் படம் சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ் படம் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம். முதல் படம் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 ஆகும் என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், சீன மொழியில் இந்தப் படத்துக்கு எப்படி ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

Advertisment
Advertisements

நடிகர் சத்யராஜ் பேசுகையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில் சீன மொழியிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டு ஹிந்திப் படம் டங்கல் போல் ஓடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனது கனா இன்று நிறைவேறியிருக்கிறது என்றார்.

அர்ஜுன் நடிக்கும் புதிய படம்
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ஒரு திகில் படம் தயாராகிறது.

அந்தப் படத்தின் பெயர், ‘தீயவர் குலைகள் நடுங்க.’ இது, ஒரு கொலை வழக்கு விசாரணையின் பின்னணியில் நடக்கும் அழுத்தமான திகில் படம்.

துப்பறியும் பாணியில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. தினேஷ் லட்சுமணன் டைரக்டு செய்ய, அருள்குமார் தயாரிக்கிறார்.

தாயாக நடிக்கும் பூனம் பாஜ்வா

2008-ம் ஆண்டில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலமாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமான பூனம் பாஜ்வா, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை-2 உள்பட பல படங்களில் நடித்தார்.

3 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பின், அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை.

3 வருடங்களுக்குப் பிறகு அவர், ‘குருமூர்த்தி’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக வருகிறார்.

ஹோலி கொண்டாடிய பாலிவுட் பிரபலங்கள்

வட இந்தியாவில் கொண்டாடப்பட்டுவரும் மிக முக்கியமான பண்டிகை ஹோலி. வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் மற்றொருவர் தூவி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

வாழ்க்கை வண்ணமயமானது என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பண்டிகை இருக்கும்.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகளும் ஹோலியை கொண்டாடினர்.

2 படம் சேர்ந்து நடிச்சாங்க… தமிழ் சினிமாவில் அடுத்த டும் டும் டும்!

ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பிரபாஸ் படம்

நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ராதே ஷ்யாம்.
இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்திருந்தார். படம் வெளியான 6 நாட்களில் ரூ.184 கோடி வசூலை படம் ஈட்டியது.

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை ரூ.184 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: