மரியாதை ராமண்ணா படம் தான் தெரியும். இது என்ன ஊரின் பெயரா இருக்குனு பாக்குறீங்களா...
மதனப்பள்ளி கேள்விப்பட்டிருப்பீங்கல்ல, அதோட பழைய பேருதான் மரியாதை ராமண்ணா பட்டணம்.
மதனப்பள்ளி ஊரின் சிறப்பு அங்குள்ள சுற்றுலாத்தளங்கள் குறித்து இங்கு காண்போம் :
மதனப்பள்ளி பகுதி, விவசாய துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இந்தியாவின் பலபகுதிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. மதனப்பள்ளி சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்குவதற்கு இங்குள்ள ஹார்ஸ்லி குன்றே முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆந்திர மாநிலத்தின் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமாக ஹார்ஸ்லி குன்று உள்ளதால் ஆந்திரா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறந்த கோடைவாசஸ்தலமாக இந்த குன்று விளங்குகிறது. இங்குள்ள பெசன்ட் தெஸோபிக்கல் கல்லூரி, அன்னி பெசன்ட் அம்மையாரின் நினைவாக கட்டப்பட்டது.
மதனப்பள்ளியில், பனிக்காலத்தை தவிர மற்ற காலங்களில் அதிக வெப்பநிலையே நிலவுவதால், இங்குள்ள அழகை ரசிக்க பனிக்காலமே உகந்தது.