தமிழ் மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு துபாயில் மறைந்தார். அவரின் மரணம் இயற்கையானது அல்ல என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் கேரள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என உமாதாதன் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார் டி.ஜி.பி. ரிஷிராஜ். மேலும் தொடர்ந்துள்ள அவர், “அது எப்படி நடந்திருக்கும் என நான் உமாவிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர், ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.