Sridevi Gets A Wax Figure: பிரபல நடிகை ஸ்ரீதேவி இந்த ஆண்டு 56 வயதை கடந்திருக்க வேண்டியவர். தமிழில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்து, பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை சிங்கப்பூரிலுள்ள, மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் இன்று திறந்திருக்கிறார்கள். முன்னதாக இதற்கான டீசரை அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் மேடம் துசாட்ஸ் வெளியிட்டது. 1987-ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவியின் லுக்கில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
One more day to the official launch of Sridevi’s first and only unique wax figure in Madame Tussauds Singapore! Don’t forget to tune in to our Facebook and Instagram at SGT 10AM for our LIVE streaming! #Sridevi #MTSGSridevi #MrIndia #MTSG #MadameTussaudsSG pic.twitter.com/mHjAyWgDhh
— Madame Tussauds Singapore (@MTsSingapore) September 3, 2019
தவிர, இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், தலைவர்கள் மற்றும் நடிகர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. அதோடு நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.