அந்த நாளில், மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி இந்தி சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், அமிதாப் பச்சனும் அப்படித்தான். மற்ற ஒவ்வொரு நடிகையும் அமிதாப் பச்சனுடன் நடித்து தங்கள் கேரியரை உயர்த்த விரும்பினாலும், ஸ்ரீதேவி பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க விரும்பியதால், அமிதாப் பச்சனுடன் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, 1992 ஆம் ஆண்டு வெளியான குதா கவா திரைப்படத்தில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அமிதாப் பச்சனுக்கு ரோஜாக்கள் நிறைந்த டிரக் ஒன்று தேவைப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: When Amitabh Bachchan showered a truck full of roses on Sridevi to convince her to do Khuda Gawah, she said no: ‘She put a condition…’
சத்யார்த் நாயக் எழுதிய ‘ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்க்ரீன் காடஸ்’ என்ற புத்தகத்தில், ஸ்ரீதேவியுடன் ஒரு பாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மறைந்த நடன இயக்குனர் சரோஜ் கான், அமிதாப் பச்சன் ரோஜாக்கள் அனுப்பி ஸ்ரீதேவிக்கு மலர் மழை பொழிந்த, அசத்தலான காட்சியை நினைவுப்படுத்தினார்.
சரோஜ் கான் கூறுகையில், “டிரக் வந்தபோது நாங்கள் ஒரு பாடலைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். ஸ்ரீதேவியை அதன் அருகில் நிற்க வைத்து, அந்த டிரக் முழுவதும் சாய்ந்து, ஸ்ரீதேவி மீது ரோஜாக்களை பொழிந்தனர். இது மிகவும் அசத்தலான காட்சியாக இருந்தது,” இந்த அழகான நிகழ்வு ஸ்ரீதேவியிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் அவர் ஏற்க மறுத்து, அதைச் செய்ய போதுமானதாக இல்லை என்று உணர்ந்ததார். அதாவது அவர் அமிதாப்பின் மனைவி மற்றும் மகள் ஆகிய இரு வேடங்களில் நடிக்கும் படத்தில் அமிதாப் உடன் நடிக்க நிபந்தனை விதித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்கள் மனோஜ் தேசாய் மற்றும் முகுல் ஆனந்த் ஆகியோர் அவரது நிபந்தனைக்கு இணங்கினர், மேலும் இரு நட்சத்திரங்களும் குதா கவாவில் ஒன்றாக நடித்தனர், இது அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது”
குதா கவாவுக்கு முன், ரமேஷ் சிப்பி, ஸ்ரீதேவி மற்றும் அமிதாப் பச்சனை தனது ராம் கி சீதா ஷியாம் கி கீதா திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார், அங்கு அவர்கள் இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். ஹிட்டான "ஜும்மா ச்சும்மா" என்ற பாடலைக் கூட இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். படத்தில் பாடல் இடம் பெற்றுள்ளதை சரோஜ் கான் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டார், “இந்த காட்சியில் அமிதாப் பிக்பாக்கெட் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடிக்கும் போலீஸ்காரராக இருந்தார். என்ன லஞ்சம் கொடுக்கலாம் என்று ஸ்ரீதேவி கேட்க, அமிதாப் ஒரு சும்மா கேட்கிறார்”
இருப்பினும், படம் ஒருபோதும் திரைக்கு வரவில்லை, பின்னர் 1991 ஆம் ஆண்டு ஹம் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் கிமி கட்கர் நடிப்பில் இந்த பாடல் படமாக்கப்பட்டது.
கௌரி ஷிண்டேவின் 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில்தான் பாலிவுட் ரசிகர்கள் கடைசியாக அமிதாப் பச்சனும் ஸ்ரீதேவியும் இணைந்து திரையில் பார்த்தனர். படத்தில் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“