READ IN ENGLISH
லியோ படத்தை இலங்கையில் வெளியிட வேண்டாம் என்று இலங்கை தமிழர் எம்.பி ஒருவர் நடிகர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் படம் அதிகாலை காட்சி திரையிட அனுமதி உள்ள நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டைட்டில் பிரச்சனை காரணமாக லியோ படம் ஆந்திராவில் வெளியிட வரும் 20-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தயாரிப்பு நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்கள் சதவீத கணக்கு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல திரையரங்குகளில் லியோ படத்தின் முன்பதிவு நடைபெறவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசனின், விருமாண்டி, விஸ்வரூபம், மற்றும் விஜயின் தலைவா ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது லியோ, ரிலீசுக்கு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் படமாக மாறியுள்ளது.
கமலின் விருமாண்டி (முதலில் பெயர் சண்டியர்) தலைப்பு மற்றும் விஸ்வரூபம் முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டாலும், லியோ ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இது புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல் படத்தின் டிரெய்லரின் அதிகப்படியான வன்முறை காட்சி குறித்து விமர்சனம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் வெளியீட்டில் சிக்கல்கள் எழுந்துள்ளது. பல திரையரங்குகள் இன்னும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்யாத நிலையில், லியோ படத்தில் இலங்கையில் இருந்து ஒரு எதிர்ப்பு குரல் ஒருவாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சில தமிழக எம்.பி.க்கள், அக்டோபர் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதால், படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிட வேண்டாம் என்று விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தப்படும்போது லியோ படம் வெளியானால் அது எங்களுக்கு பின்னடைவாக இருக்கும். விஜய் நாடே கொண்டாடும் நட்சத்திரம் என்பதால் அவரை அவரை ரசிக்க ரசிகர்கள் கூட்டங்கள் இலங்கையிலும் உள்ளனர். இதனால் போராட்டத்தின்போது படத்தை வெளியிடுவது தமிழ் மக்களையும் போராட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/E29HNM4zaudxZGXACaEr.jpg)
முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சித்தாரா என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் லியோ என்ற டைட்டிலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் காப்புரிமை பிரச்சனை காரணமாக லியோ படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதித்தது. ஆனால் தற்போது சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் நாக வம்சி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“